தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்கிறார் 57-0120E 1. கடந்த நாட்களில்…நான் வரும்பொழுது எனக்காக அதை பாடும்படி, இந்த பிரயாசத்தை எடுக்கும் சகோதரி ஆஞ்சிக்கும் (Angie), சகோதரி கெர்டிக்கும் (Gerti) நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. நான் அதை கேட்கும்பொழுது, நீண்ட காலத்துக்கு முன்புள்ள பழைய கூடாரத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர், ஒரு குளிர்காலம் முழுவதும் எங்களுக்கு ஒரு மகத்த்தான எழுப்புதல் இருந்தது. அதில் கர்த்தராகிய இயேசுவின் வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தின் பேரில் பிரசங்கங்கள் இருந்தன. நான்…ஏறக்குறைய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் அவர்கள் தொடர்ந்து பற்றிக் கொண்டே இருங்கள் என்ற பாடலைப் பாடுவார்கள். சகோதரி கெர்டி உங்களுக்கு நன்றி. அவர்கள் அதை எங்களுக்காக மீண்டுமாக இன்றிரவு பாடினார்கள் என்பதற்கு நான் நிச்சயமாகவே சந்தோஷமாய் இருக்கிறேன். 2 சகோதரி கெர்டிக்கு தொண்டை சற்று கரகரப்பாய் இருந்தது என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். சரி, அவளுக்கு மட்டும் அவ்வாறு உள்ளதாக உணரவேண்டாம். எனக்கும் கூட கரகரப்பாகவே உள்ளது. ஆனால், இந்தக் காலையில் சுமார் இரண்டரை மணி நேர பிரசங்கத்தின் மூலம் ஜனங்களை கஷ்டப்படுத்தின பின்னர்…அது என்னுடைய மிகச் சிறிய அளவுள்ள வீதம். எனவே, நான் வெளியே சென்றேன். அப்பொழுது தரையின் மேல் சற்று ஈரமாக இருந்தது. உண்மையிலேயே அந்த விதமாகத்தான் எனக்கும் கரகரப்பாய் உள்ளது. 3 ஆனால், நான் வார்த்தையை நேசிகிறேன், விசேஷமாக வார்த்தையோடு பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதத்தை நேசிக்கிறேன். அவர் ஆசீர்வதித்துக்கொண்டும், உதவி செய்துகொண்டும் இருக்கும்பொழுது, என்னால் வெறுமென சாதாரணமாக நிறுத்துவதற்கு ஒரு இடத்தை கண்டுபிடிக்க முடிகிறதில்லை. ஆகவே அது எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது, ஒருகால் இன்றிரவு நான் பேச விரும்பிகிறது அவ்வளவு நீண்டதாய் இல்லாமல் இருக்கலாம், ஏனென்றால் சற்று கரகரப்பாய் இருந்தது. ஆனால் நம்முடைய ஆசீர்வாதத்திற்காகவும், நம்முடைய ஜீவியங்களில் முக்கியமாக நமக்கு தேவைப்படுகிற அவருடைய ஆவிக்குரிய உதவிக்காகவும் தேவன் பேரில் சார்ந்திருக்கிறேன். 4 இப்பொழுது சகோதரன் நெவில் அவருடைய நிகழ்ச்சி நிரலோடு, சொல்லப்போனால், அவருடைய நிகழ்ச்சி நிரலை அறிவித்திருக்கிறார். நான் அதை கேட்கிற ஒவ்வொருவரும் அந்த நிகழ்ச்சிகளை கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்பொழுது இதைக் கூறும்படி அவர் என்னிடம் கூறவில்லை. ஆனால் கடந்த சனிக்கிழமை நான் கேட்டது போன்ற ஒரு நிகழ்ச்சியை கேட்டு ஒருபோதும் அந்தளவு நான் ஆசீர்வதிக்கப்பட்டதேயில்லை. எத்தனை பேர்கள் அந்த செய்தியைக் கேட்டீர்கள்? அது ஒரு தலைசிறந்த படைப்பாய் இருந்தது. ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் WLRPல் ஒன்பது மணியிலிருந்து ஒன்பது முப்பது மணி வரை மூவரைக் கொண்ட நெவிலின் நிகழ்ச்சி இருக்கும். 5 நான் அந்த அறையில் இருந்துகொண்டு பதிவாகுதலை செய்யும் சகோதரன் லியோவிடம் நான் பேசிக்கொண்டு இருந்தேன், அவர் அதனோடு அவ்வளவாய் உணர்ச்சியூட்டப்பட்டு, அதாவது அவரை அறியாமலேயே…அவர், “யார் இந்த பிரசங்கியார்?” என்று கேட்டாராம். அவர் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தாராம். சகோஹரன் ஜீன் இல்லை, அவர்களில் சிலர், “அது சகோதரன் நெவில், இது அவருடைய நேரம்” என்று கூறினார்களாம். அது உண்மையாகவே அற்புதமாயிருந்தது. அது மட்டுமல்ல, ஆனால் ஒவ்வொன்றுமே அற்புதமாய் இருந்தது. 6 சகோதரன் நெவில் பேசுவதை கேட்க நான் விரும்புகிறதற்குள்ள காரணத்தை நான் உங்களுக்கு கூறுகிறேன். முக்கியமாக அவர் ஒரு நல்ல பிரசங்கியார் என்பதற்காக அல்ல, ஆனால் அவர் என்ன பிரசங்கிக்கிறாரோ அதன்படி அவர் ஜீவிக்கிறார் என்று நான் அறிந்துள்ளதே அதன் காரணமாயிருக்கிறது. நீங்கள் எனக்கு ஒரு பிரசங்கத்தை செய்வதைக் காட்டிலும் நீங்கள் எனக்கு ஒரு பிரசங்கமாக ஜீவிப்பதையே நான் விரும்புவேன். அது அதிக பலனுள்ளதாய் இருக்கும். 7 இப்பொழுது நான் அறிவித்திருக்கிறேன், இன்றிரவு சற்று நேரம், தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறார் என்பதின் பேரில் நான் பேசுவேன் என்பதை நான் அறிவித்திருந்தேன். 8 இந்தக் காலையில் நான், கிறிஸ்தவத்தின் ஆள்மாறாட்டம் என்பதன் பேரில் பேசிக்கொண்டிருந்தேன். 9 இப்பொழுது நாம் அவருடைய வார்த்தையை வாசிக்கையில், கர்த்தர்தாமே தம்முடைய ஆசீர்வாதங்களை இப்பொழுது கூட்டுவாராக. நான் வேத வார்த்தையில் பல இடங்களிலிருந்து, குறைந்தது மூன்று அல்லது ஒருக்கால் இன்னும் அதிகமான இடங்களிலிருந்து குறிப்பிட்டு கூறி வாசிக்க விரும்புகிறேன். ஏனென்றால் நாம் பேசிக் கொண்டிருக்கிற இது வார்த்தையைப் பற்றியதாய் இருக்கிறது. வேதாகமத்தின் கடைசி புத்தகத்தில், வெளிப்படுத்தின விசேஷ புத்தகம், முழு வேதாகமமும் முடிக்கப்பட்ட பிறகும், இங்கே சபைக்கு ஒரு செய்தியிருந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 22ஆம் அதிகாரத்தின் 17ம் வசனத்திலிருந்து துவங்குவோம். ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவித்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடு எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார். இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். 10 பின்னர் பரிசுத்த யோவானில், பரிசுத்த யோவான் 12-ம் அதிகாரம் 39-வது வசனத்திலிருந்து துவங்குவோம். ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்: அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும் அவர்களுடைய கணகளை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான். 11 பின்னர் பரிசுத்த மத்தேயு 24-ம் அதிகாரம் 35-வது வசனத்தில் இயேசுவானவர் உரைக்கிறார். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. 12 கலாத்தியர் 1:8ல், நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 13 இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை அப்படியே சற்றுநேரம் ஜெப வார்த்தைக்காக வணங்குவோமாக. 14 எங்கள் தேவனே, “என் நாமத்தினாலே பிதாவை எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்” என்று கூறி, வரும்படியாக எங்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிற உம்முடைய நேச குமாரனுடைய நாமத்தில் நாங்கள் உம்மிடத்திற்கு வருகிறோம். எனவே நாங்கள் இயேசுவின் நாமத்தினாலே முதலாவதாக எங்களுடைய சொந்த பாவத்திற்கும், எங்களுடைய குறைபாட்டிற்கு மனந்திரும்பவும், எங்களுடைய எல்லா அக்கிரமத்திலிருந்தும் எங்களைக் கழுவவும், எங்களுடைய சிந்தனைகளை சுத்திரகரிக்கவும், அதாவது சரியான காரியங்களில், தேவனுடைய இராஜ்ஜியத்தை பற்றினதுமான காரியங்களில் நாங்கள் சிந்திக்கவும், உம்மை கேட்கும்படி நாங்கள் வருகிறோம். இன்றிரவு எங்களுடைய சிந்தனைகள் தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஏதோ மேலான காரியத்தின் மீதும், அந்த ராஜ்ஜியத்திலுள்ள ஜனங்களை மேலாக ஆக்கக்கூடியதாகவும் இருப்பதாக. எல்லா அசுசியான காரியங்களிலிருந்தும் எங்களுடைய இருதயங்கள் சுத்திகரிக்கப்படுவதாக. உமக்கு முன்பாக நாங்கள் நேர்மையுள்ளவர்களாயும், சுத்தமான கரங்களோடும், ஒரு களங்கமற்ற இருதயத்தோடும் நடக்க நாங்கள் வாஞ்சிக்கிறோம். ஓ, தேவனால் மட்டுமே இதைச் செய்ய முடியும். 15 பிதாவே எங்கள் கரங்களை சுத்தமாக்கவும், எங்கள் இருதயங்களை களங்கமற்றதாக ஆக்கவும் நாங்கள் ஜெபிக்கிறோம். வார்த்தையினால் உலகத்தின் காரியங்களிலிருந்து தீட்டுக்கழிக்கும் ஜலத்திலே, வேறுபிரித்தலின் தண்ணீரினால் எங்களை கழுவியருளும். வார்த்தையின் மூலமாக, நீர் “நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்” என்று கூறியிருக்கிறீர். இன்றிரவு எங்களுடைய எல்லா இருதயங்களுக்குள்ளும் வார்த்தையானது ஆழமாய் ஆராயும்படி நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். எங்களை எல்லா அவிசுவாசத்தினின்றும் சுத்திகரியும், எங்களுடைய இருதயம் பரிசுத்த ஆவிக்குள்ளாக புதுப்பிக்கப்படுவதாக. இன்றிரவு தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு லாபமாயிருக்கின்றதான அந்தக் காரியங்களை அவர் தாமே எங்களிடம் கொண்டு வருவாராக. கர்த்தாவே, பாதையினூடாக பெலவீனமாயுள்ளவர்களுக்கும், வார்த்தையை விசுவாசிப்பதில் கடினப்பட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கும் உதவி செய்யும். 16 ஓ, தேவனே, நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற இந்த இருளான, நம்பிக்கை துரோகமான வேளையிலே, உலக பிரச்சனைகளுக்காக நாங்கள் முன்னோக்கிப் பார்க்கையிலே, நாங்கள் இருள் மட்டும்தான் முன்னிற்கிறதைக் காண்கிறோம். நீரோ, “இந்தக் காரியங்கள் சம்பவிக்கத் தொடங்கும்பொழுது எங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், ஏறெடுத்துப் பாருங்கள்” என்று கூறியிருக்கிறீர். இந்த நேரத்திலே எங்களுடைய மீட்பை வாக்களித்திருக்கிற பரலோகத்தின் தேவனின் முகத்தை நோக்கிப் பார்க்கவும், பரிசுத்த ஆவியினாலே இருதயத்திற்குள்ளாக இதை ஏற்றுக் கொள்ளவும் இன்றிரவு நாங்கள் போதிக்கப்படுவோமாக, பத்மூ தீவிலே யோவான் ஜெபித்தது போல “கர்த்தராகிய இயேசுவே, வாரும்”. 17 இன்றிரவு இந்தக் காரியங்களை நீர் எங்களுக்கு அருள வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். வியாதியாயும், பாதிக்கப்பட்டுள்ள யாவரையும் சுகப்படுத்தும். பரிசுத்தவான்களை ஆறுதல்படுத்தும். பாவிகளை மனந்திரும்புதலுக்கு அழையும். தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு, முன்னாக உள்ள யுத்தத்திற்கு ஆயத்தமாக்கப்பட்ட போர்வீரர்களைப் போன்று இங்கிருந்து நாங்கள் புறப்பட்டுச் செல்லும்படியாய் எங்களெல்லோரையும் புதுப்பியும். 18 இப்பொழுது, இன்றிரவு, நாங்கள் ஒவ்வொருவரும் ஜெபத்தில் கூடி வந்திருக்கையில், கொடி எங்கள் மேல் பறக்க, விடிவெள்ளி நட்சத்திரம் பாதையிலே வழிநடத்திச் செல்லட்டும்! சத்துருவின் சேனையும் கூட பாளயமிறங்கியுள்ளது. அவர்களுடைய தலைமை அறைக் கூவலிடுபவன் வெளியே வந்து, “இந்த அற்புதங்களின் நாட்கள் கடந்து போய்விட்டது” என்று கூறி, தனக்கு பெருமையை ஏற்படுத்திக் கொள்கிறான். ஆனால், ஓ தேவனே, எங்களுக்கு ஒரு தாவீதை, ஒரு யுத்த வீரனை, ஒரு அறை கூவலிடுபவனை எழுப்பும். அந்த ஆவியானது ஒவ்வொருவருடைய இருதயத்திலும் முழுமையாய் வாசம் பண்ணுவதாக. நாங்கள் இதை கிறிஸ்துவினுடைய நாமத்திலே கேட்கிறோம். ஆமென். 19 இந்த மிக முக்கியமான பொருளை அணுகுகையில், இது எவரொருவரின் விசுவாசத்தை நோக்கமாகக் கொண்டோ, அல்லது புரட்டவோ அல்லது தொந்தரவு கொடுக்கவோ அல்லது சத்துருவை உண்டாக்கவோ நோக்கங்கொண்டதல்ல. இது தேவனுடைய ஜனங்களைக் கூட்டவும், ஒன்று சேர்த்து இணைக்கவும் மட்டுமே உள்ளது. இன்றிரவு இந்த ஜெபகூடாரத்தில் நான் இதை பேசும்படி தெரிந்து கொண்டதற்கு காரணம் என்னவெனில், நாம் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தினுடைய நிலைமையின் காரணமாகவே. சம்பவிக்கப் போகிறதென்று முழு உலகமும் எச்சரிக்கையாயிருக்கின்ற ஏதோ காரியத்தின் துவக்கத்தில் நாம் இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். ஒருவராலும் தங்களுடைய விரலை அதன் மேல் வைக்கக் கூடாதது போன்று தென்படுகிறது, ஆனால் அப்படியிருந்தும், ஏதோ காரியம் சம்பவிக்கப்போகின்றதாய் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அது இங்கு மட்டுமல்ல, அது எல்லா இடத்திலும் இருக்கிறது. 20 நாம் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தையும், கிறிஸ்துவையும், சுவிசேஷத்தையும் பற்றின ஒரு மேலான புரிந்துகொள்ளுதலை நாம் உடையவர்களாயிருக்க, மேலாய் அறிந்திருக்க, நாம் புரிந்து கொள்வதற்கு காரணமாயிருக்க, இன்றியமையாத முக்கியமாயிருக்கக்கூடிய ஏதோ காரியத்தை பேசுவதற்கு, ஜனங்கள் ஒன்றுகூடி சேந்து வந்திருக்கையில், இன்றிரவு இந்த நேரத்தை நாம் எடுத்துக் கொள்வோமானால், அது மிகவும் பொருத்தமானதாய் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 21 இப்பொழுது துவக்கமாக நான் இதைக் கூற விரும்புகிறேன். அதாவது அண்மையில் நான் ஒரு லூத்தரன் குருமார் பள்ளியிலிருந்தேன். லூதரன் சகோதரர்கள் மிகக் கடினமான குறைகூறும் ஒரு கடிதத்தை அந்தத் தலைவரால் எனக்கு எழுதின பிறகு, அவர்கள் இதை என்னிடத்தில் கூறினார்கள். நான் ஒரு குறி சொல்லுகிறவனென்றுக் கூறி இன்னும் அநேக பொல்லாத காரியங்களை என்னிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்களால் அதை உண்மையாகவே நிரூபிக்க முடியவில்லை, ஏனென்றால் நான், “பிசாசினால் சுகமளிக்க முடியாது” என்று கூறியிருந்தேன். 22 இப்பொழுது பிசாசினால் சுகப்படுத்த முடியுமென்றால், அவன் ஒரு சிருஷ்டிகர்த்தனாய் இருக்கிறான். ஒரு சிருஷ்டி கர்த்தர், ஒரே ஒருவர் தான் இருக்கிறார். அது தேவன். பிசாசினால் சிருஷ்டிக்க முடியாது. 23 பிசாசானவன் சர்வ வியாபியானவனும் கூட அல்ல. அவன் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மட்டும்தான் இருக்க முடியும்; அவனுடைய பொல்லாத ஆவிகள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. ஆனால் தேவனோ சர்வ வியாபியாயிருக்கிறார். பிசாசுனால் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மட்டும் தான் இருக்க முடியும். 24 தேவன் சர்வ வல்லமையுள்ளவராயிருக்கிறார். பிசாசுக்கோ ஒரு வரம்புக்குட்பட்ட வல்லமைதான் உண்டு. அதென்னவென்றால் அவன் தன்னுடைய முழுபொய்யையும் கூறி ஏமாற்றி, அவனால் பழி சுமத்த முடிகின்றவரை மட்டுமே. அவனுக்கு உள்ள சட்டரீதியான ஒரே காரியம் உங்களைத் திரும்பவும் பூமியின் தூளாக ஆக்குவதேயாகும். அந்த ஒரு காரியத்தை மட்டுமே அவன் உடையவனாயிருக்கிறான். அப்படியிருந்தாலும் அது உயிர்த்தெழுதலுக்கான தேவனுடைய வாக்குத்தத்தமாயும், தேவனுடைய ஆசீர்வாதமாயும் உள்ளது. 25 எனவே, தேவன் ஒருவர் மட்டுமே சிருஷ்டி கர்த்தராயிருக்கிறார். தேவன் ஒருவரால் மட்டுமே உயிரணுக்களை படிப்படியாக உருவாக்க முடியும். உயிரணுக்கள் சிருஷ்டிப்பாய் இருக்கின்றன. சிருஷ்டிப்பு தேவனால் மட்டுமே உண்டாகிறது. எனவே தேவன் ஒருவர் மட்டுமே சுகமளிப்பவராய் இருக்கிறார். தெய்வீக சுகமளித்தலைத் தவிர வேறு சுகமளித்தலே கிடையாது. 26 நாம் ஒரு எலும்பை பொருத்தக்கூடிய பெயர் பெற்ற வைத்தியர்களை உடையவர்களாக இருக்கின்றோம்; ஆனால் தேவன் சுகமளிக்கிறார். நாம் குடல்வால் வளர்ச்சியை வெட்ட அல்லது ஒரு தசை வளர்ச்சியை வெட்டி எடுக்கக்கூடிய வைத்தியர்களை உடையவர்களாக இருக்கிறோம். அவர்கள் செய்யக்கூடிய காரியம் அது மாத்திரமே. ஆனால் சுகமளித்தலை செய்கிறது யார்? தேவனே சுகமளித்தலை செய்கிறார். ஏனென்றால் அவரே சிருஷ்டி கர்த்தராயிருக்கிறார். 27 இப்பொழுது, அவர், “லூத்தரன்களாகிய நம்மால் என்ன செய்ய முடியும்? நீங்கள் எங்களை கிறிஸ்தவர்கள் என்று கருதுகிறதாக நீங்கள் நினைக்கிறீர்களா?” என்றார். 28 நான், “மிக நிச்சயமாக” என்றேன். நான், “தேவனுடைய இராஜ்ஜியம் ஒரு மனிதன் தன்னுடைய விதையை வயலில் விதைத்த ஒரு மனிதனைப் போன்று உள்ளது. ஒருநாள் காலை அவன் சென்றபோது, அங்கே இரண்டு சிறிய கதிர்கள் வசந்த கால துவக்கத்தில் மேலே வந்திருந்ததை அவன் கண்டான். விவசாயியோ, ‘என்னுடைய வயலைப் பாருங்கள்’ என்றான். இப்பொழுது அவன் தானியத்தைப் பெற்றிருந்தானா? அவன் மறைமுகமாக அதைப் பெற்றிருந்தான், ஆனால் கதிரில் அல்ல” என்றேன். 29 இப்பொழுது நான் உங்களுக்கு ஒன்று கொடுத்தது போன்று நீங்கள் என்னிடத்தில் ஒரு ஓக் மரத்தைக் கேட்பீர்கள். நான் உங்களுக்கு ஒரு கர்வாலி மரக்கொட்டையை கொடுத்தேன். மறைமுகமாக ஓக் மரமானது கர்வாலிக் கொட்டையில் இருக்கிறது. ஆகையால் தானிய மணியில் உங்களுக்கு தானியம் இருக்கிறது, ஆனால் அப்படியிருந்தாலும் அது மறைவாக உள்ளது. நீங்கள் தானியத்தை உடையவர்களாயிருக்கிறீர்கள். இப்பொழுது விவசாயி, “என்னுடைய தானிய விளைச்சலைப் பாருங்கள். அது அழகாக இருக்கிறதல்லவா? என்னுடைய தானியமாயிற்றே!” என்றான். அவன் அதை தானியம் என்றழைத்தான். ஆயினும் அது முளை கிளம்பியதிலேயே இருந்தது. 30 சீக்கிரத்தில் அந்த தானியத்தின் தண்டு வளர்ந்து ஒரு பட்டுக் குஞ்சமாக ஆகிறது. அந்த பட்டுக்குஞ்சத்தில் மகரந்தப்பொடி உண்டாகிறது, அல்லது பட்டுக் குஞ்சத்திலிருந்து தான் மகரந்தப்பொடி விழுகின்றது. அதுதான் தானியம் அபிவிருத்திக்கு காரணமாயிருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயுள்ள இனச்சேர்க்கையாயிருக்கிறது. இப்பொழுது பட்டுக் குஞ்சம் இலையிடம் திரும்பிப் பார்த்து, “இப்பொழுது எனக்கு உன்னோடு எவ்வித சம்மந்தமும் கிடையாது. நீ காட்சியிலேயே கூட இல்லை. நான் ஒரு வித்தியாசமான காரியம். நான் பட்டுக் குஞ்சமாக இருக்கிறேன். நானே அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறேன். உனக்கு அதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது” என்று கூறினால் என்னவாயிருக்கும். ஆனால், இருந்தபோதிலும், இலையில்லாமல் தானியம் மகரந்தப் பொடியாக முடியாது. ஏனென்றால் பட்டுக்குஞ்சம் இலைக்குள்ளாக விழுகிறது. அங்கிருந்துதான் கதிர்கள் உற்பத்தியாகின்றன. இலையில் இருக்கின்ற அதே ஜீவன்தான் பட்டுக்குஞ்சத்திலும் கூட இருக்கிறது. 31 சீக்கிரத்தில் கதிர் உண்டாகிறது. கதிர் மேலே வருகிறது, தானியம். பின்னர் தானியம் பட்டுக்குஞ்சத்திடம், “எனக்கு உன்னோடு எந்த சம்மந்தமும் கிடையாது. நீ காட்சியில் கூட இல்லை” என்கிறது. ஆனால் அது பட்டுக்குஞ்சமாக இல்லாமலிருந்தால், தானியமே இருந்திருக்காது. 32 ஆக காரியம் என்னவெனில், அந்தச் சிறிய தண்டானது லூத்தரன் எழுப்புதலாயிருந்தது; பட்டுக்குஞ்சம் மெதோடிஸ்ட் எழுப்புதலாயிருந்தது; கதிர் இந்த எழுப்புதலாயிருக்கிறது. ஆனால் யாவும் சேர்ந்து, அதே ஆவியாய், துவக்கத்தில் அந்த சிறிய தண்டிலிருந்து அதே ஜீவனே தானியத்திலிருக்கிற ஜீவனாயிருக்கிறது. 33 இப்பொழுது பெந்தெகொஸ்துகளிடம் உள்ள ஒரே காரியம்,…நான் பெந்தேகொஸ்து என்று அழைத்துக் கொள்கிறவர்களையல்ல, உண்மையான பெந்தேகொஸ்துக்களையே கூறுகிறேன். ஆனால் உண்மையான பெந்தேகொஸ்தே செய்தியானது லூத்தரன், மெதோடிஸ்டு, பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன் இவர்களினூடாக கடந்து சென்று பூமிக்குள்ளாக சென்ற அதே காரியத்தை திரும்ப அளித்தலேயன்றி வேறொன்றுமில்லை. புரிகின்றதா? இப்பொழுது அது சரியாக கதிருக்கு வந்திருக்கிறது. இப்பொழுது நான்… 34 நான் இதை கூறுவதற்கு அவ்வளவாய் வெறுக்கிறேன். அதன் மேல் சில காளான்கள் வளர்ந்து கொண்டிருந்தது. விவசாயிகளாகிய உங்களுக்கு அது என்ன என்று தெரியும். அது கதிர்போன்றே காணப்படுகின்ற ஒன்று. இப்பொழுது, இன்றிரவு நாம் அதைத்தான் வெட்டி எடுக்க விரும்புகிறோம். ஏனென்றால் நீங்கள் அதை உங்கள் தானியத்தின் மேலிருந்து நீக்கவில்லையென்றால் அது முழு விளைச்சலையுமே பாதிக்க காரணமாகிவிடும். 35 ஆக அந்த ஒரு காரியத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது ஜனங்களின் அனைத்து ஸ்தாபன சபைகளும், அவைகள் மகத்தான நேரங்களினூடாக வந்து கொண்டிருக்கையில், அது முதிர்ச்சியடைந்து கொண்டே வந்தது. இப்பொழுது சபையானது விதையில் இருக்கிறது. நிலத்திற்கு அடியில் சென்ற அதே காரியத்தை அது வெளிக் கொண்டு வந்ததாக வேண்டும். ஆகையினால் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற சபையானது முழுவதுமாக முதிர்ச்சியடைந்த சபையாக இருக்கிறது. ஒரு பகுதி அந்த விதமாக இன்னொரு பகுதியிடம் கூற முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்களுடைய நாளில் நன்றாய் ஜீவித்தனர். அவர்கள் தேவனுடைய பார்வையில் தானிய வயலாய் இருந்தனர். எனவே நாம் யாவரையும் குறைவுபடுத்த விரும்பவில்லை. 36 ஆனால் இன்றைக்கு பல போதகங்கள் உள்ளன. விசேஷமாக பிரசித்திப்பெற்ற உலகளாவிய ஒலிபரப்பில் தேவனுடைய வார்த்தையை குறைவுபடுத்திக்கொண்டு, “தேவன் ஒரு சபையில் வாசஞ்செய்கிறார், வார்த்தையில் அல்ல” என்று கூறுகிறார்கள். 37 சில சாயங்காலங்களுக்கு முன்னர், நான் பெயர் பெற்ற உபதேசியார்களில் ஒருவருடைய பேச்சைக் கேட்டேன். அவர், “நீங்கள் உங்கள் வேதாகமத்தை எங்கிருந்து பெற்றீர்கள்? தேவன் ஒரு நோக்கங்கொண்டவராயிருந்து பரலோகத்தில் உங்களுக்கு ஒரு வேதாகமத்தை எழுதி, அதை சிறிய தூதர்களிடத்தில் கொடுக்க, அவர்கள் அதை பரலோகத்தின் தாழ்வாரங்களினூடாக கீழே வந்து, அதை ஜனங்களாகிய உங்களுக்கு வழங்கினர் என்று நான் நினைக்கிறேன்” என்றார். மேலும் “வேதாகமத்தின் உபதேசத்தில் ஒருவரும் ஜீவிக்க முடியாது. அது முற்றும் அப்படியே நம்பத்தக்கதல்ல” என்றார். அவர்கள் சபையின் முதல் துவக்கம் என்று உரிமை கோருகிறார்கள். 38 இப்பொழுது அந்த சபைக்குப் போகின்ற அந்த ஜனங்களும் நம்மைப் போன்றே புருஷர்களும் ஸ்திரீகளுமாய் இருக்கின்றனர். அவர்கள் நேசிக்கிறார்கள், புசிக்கிறார்கள், குடிக்கிறார்கள். அதை நிறுத்த ஏதாவது வழி உண்டா? வேதாகமம் அது இவ்விதமாய் இருக்கப் போகிறது என்று கூறுவதனால் அல்ல. அது உண்மையாய் இருக்கிறது. 39 ஆனால் உங்களை உற்சாகப்படுத்த, நான் என்னையே தெளிவுபடுத்தி வெளிப்படையாக்க நான் விரும்புகிறேன். அதாவது, நான் இதை தேவனுடைய முழுமையான, பிழையற்ற, கலப்படம் செய்யப்படாத வார்த்தை என்றும், அதனோடு ஒன்றும் கூட்டப்படவோ அல்லது அதிலிருந்து எடுக்கப்படவோ கூடாது என்றும் நான் விசுவாசிக்கிறேன். அது அவருடைய சபையின் முழுமையான தேவனுடைய திட்டமாய் இருக்கிறது. “ஏற்கனவே போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமேயல்லாமல் வேறெந்த அஸ்திபாரத்தையும் எந்த மனிதனாலும் கட்ட முடியாது”. உங்களுக்கு அது புரிகின்றதா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] அந்த காரணத்தால் தான் தேவனுடைய வார்த்தையின் தவறாத தன்மையில் நான் விசுவாசமாயிருக்கிறேன். அந்த ஜனங்களில் ஒருவரிடத்தில் நான், “இந்த வேதம் எங்கிருந்தது என்று நீங்களும், உங்களுடைய சபையும் கூறுகிறீர்கள்? உங்களுடைய சபை இந்த வேதாகமத்தை எழுதினதா?” என்றேன். “ஆம், எங்களுடைய பரிசுத்தவான்களே வேதாகமத்தை எழுதினர்” என்றார். 40 நான், “அப்படியானால் ஏன் அதை இந்தவிதமாக எடுத்துக் கொண்டீர்கள்? இன்றைக்கு நீங்கள் இந்த வேதத்திலிருந்து அவ்வளவு வித்தியாசமாய் இருக்கிறீர்களே” என்றேன். 41 அவர், “நல்லது”, “நீங்கள் பாருங்கள், அவர்கள் ஒரு காலத்தில் ஜீவித்தார்கள். நாமோ இன்னொரு காலத்தில் ஜீவிக்கிறோம்” என்றார். 42 நான், “ஆனால் தேவன் எல்லாக் காலத்திலும் ஜீவித்தார். மற்றும் வேதாகமம், அது ஆவியினால் ஏவப்பட்டதனால், வேதம் பிழையற்ற தேவனால் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர் தம்முடைய வார்த்தையில், ‘வானங்களும், பூமியும் ஒழிந்துபோம். ஆனால் அவருடைய வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை.’ என்று கூறினாரே” என்றேன். 43 இப்பொழுது அணுகிக்கொண்டிருக்கிற இந்தக் காரியங்களைக் காண்பதற்கு ஒருபோதும் நினைத்திராத மனிதர்களுக்கு இது மிகவும் எச்சரிப்பாய் இருக்கிறது. ஆனால் நீங்கள் மாத்திரம் அறிந்திருந்தால், அது வேத வாக்கியங்களின் நிறைவேறுதலாய் மாத்திரமே உள்ளது. நான் இதை அமெரிக்காவில் கூற அவ்வளவாய் வெறுக்கிறேன், நம்முடைய மதவெறித்தனங்களும், நாம் பெற்றுள்ள மார்க்க சம்பந்தமான காரியங்கள் என்று அழைப்படுகின்றவைகளே இன்றைக்கு உயிர்த்துடிப்பாக செயல்படுகின்றன. அவைகளை தரக்குறைவாக்கவில்லை; தேவனுடைய ஜனங்கள் அவைகளில் வாசமாயிருக்கிறார்கள். ஆனால் நான் இதை கூற விரும்புகிறேன். அதாவது, அது அமெரிக்காவுக்கு வந்திருக்கிறது. கத்தோலிக்கர் மற்றும் புரோடெஸ்டெண்டுகள் இருவருமே, வார்த்தையின் உபதேசத்திலிருந்து எடுத்துப்போட்டு விட்டு தூர விலகிப் போய்விட்டனர். அவர்கள் ஒரு முறைமையை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இந்த முறைமை ஒரு அறிவினாலான முறைமையாயிருந்து வார்த்தைக்குப் பதிலாக ஒரு வசீகரத்தை அளிக்கிறது அமெரிக்க ஜனங்கள் வசீகரத்திற்காக விழுந்து போகிறார்கள். அமெரிக்க ஜனங்கள் ஒரு தேவதையை ஆராதிக்கும் நிலைமைக்குள்ளாகி விட்டனர். 44 நான் பெண்களுக்கான ஆழ்ந்த உயர்வான மரியாதைகளை கொண்டவனாய் இருக்கிறேன். என் தாயார், மற்றும் என் மனைவி, மற்றும் எனக்கு வாலிபமான குமாரத்திகளும் இருக்கின்றனர். தன்னுடைய ஸ்தானத்தைக் காத்துக் கொள்கிற ஒரு ஸ்திரீ ஒரு சீமாட்டியாக இருக்கிறாள். ஒரு உண்மையான ஸ்திரீயைக் காட்டிலும் நம்முடைய தேசத்திற்கு இரட்சிப்பிற்குப் புறம்பாக விலையேறப்பெற்றது ஏதும் இல்லை. 45 ஆனால், அது ஸ்திரீகளை ஆராதிப்பது என்ற ஒரு ஸ்தானத்திற்கு வருகையில், அப்பொழுது நீங்கள் வேதாகமத்தின் திட்டத்துக்கு புறம்பாகி விடுகிறீர்கள். வேதத்தில் ஒரு ஸ்திரீயை, ஒரு மரியாளை அல்லது ஒரு பரிசுத்தவாட்டி சிசிலியாவை நாம் ஆராதிப்பதற்கு ஏதும் திட்டமே கிடையாது. அதற்கான ஒரு துளி வேத வார்த்தை கூட அங்கே இல்லை. அது அப்படிப்பட்ட காரியத்திற்கு எதிராகவும், முரணாகவும் உள்ளது. ஆகையால் இதுதான் துவக்கமாய் இருந்திருந்தால், அது ஏன் அவ்விதம் இருந்தது? கிறிஸ்துவோடு கூட நடந்தவர்கள், தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதினார்கள்…அதற்காக நான் வேறு எந்த மனிதனுடைய வார்த்தையையாவது நான் எடுத்துக் கொள்வேனென்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை ஐயா, இது தேவனுடைய நித்திய வார்த்தையாயிருக்கிறது. 46 இப்பொழுது, அந்த ஊழியக்காரன் அல்லது என்னிடத்தில் பேசின ஆசாரியன், அவன், “தேவன் நம்முடைய சபையில் இருக்கிறார்” என்றான். 47 நான், “தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார்” என்றேன். தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார். வேதமோ, “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமகி நமது மத்தியிலே வாசம் பண்ணினார்” என்று கூறியுள்ளது. தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார். 48 இப்பொழுது கவனியுங்கள், பழைய ஏற்பாட்டில் ஒரு செய்தியானது சரியாய் இருப்பதை அறிந்துகொள்ள இரண்டு வழிகள் அவர்களுக்கு இருந்தன. அதாவது ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைக்கும்பொழுது அல்லது ஒரு சொப்பனக்காரனும் ஒரு சொப்பனத்தைக் கண்டபோது, அவர்கள் அதை ஆரோனின் மார்ப்பதக்கத்திற்கு முன்பாக கூறினார். இந்த மார்ப்பதக்கத்தில், ஆரோனின் மார்ப்பதக்கத்தில் பன்னிரெண்டு கோத்திரப் பிதாக்களின் பிறப்புக் கற்கள் இருந்தன. அவன் அந்த பன்னிரெண்டு இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரதான ஆசாரியனாய் இருந்தான் என்பதை காட்டுவதற்கு அவன் அதை தன்னுடைய மார்பின் மேல் அணிந்திருந்தான். அவர்கள் இந்த தரிசனத்தை பேசிக்கொண்டிருக்கையில் அல்லது இந்த சொப்பனத்தை கூறிக்கொண்டிருக்கும்பொழுது, தேவன் அதை ரூபகாரப்படுத்தி இருந்தால் அங்கே ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஒளி இந்த ஊரீம் தும்மீம் மேல் சுற்றி வந்து, அந்த செய்தி உண்மை என்பதை ரூபகாரப்படுத்தினது. அது எவ்வளவுதான் தத்ரூபமாய் தென்பட்டாலும் கவலையில்லை; காலத்தோடு அது எவ்வளவு நன்றாய் ஒன்று சேர்ந்ததாய் காணப்பட்டாலும் கவலையில்லை; ஊரீம் தும்மீம் மேல் அந்த இயற்கைக்கு மேம்பட்ட ஒளி பிரகாசிக்கவில்லையென்றால், அது நிராகரிக்கப்பட்டதாகும், ஏனென்றால் தேவன் அதற்குள்ளாக இல்லை. 49 இன்றைக்கு நான் கூறுகிறேன், ஓ, நீங்கள் இதைக் கேட்க நான் விரும்புகிறேன். ஆசாரியனிடத்திலிருந்தோ, பிரசங்கியினிடத்திலிருந்தோ, தீர்க்கதரிசியினிடத்திலிருந்தோ, வேறு எந்த காரியத்திலிருந்தோ, எந்த மனிதனிடத்திலிருந்தும் வந்த எந்த செய்தியையும் அது மதிப்பிட்டது. எவ்வளவுதான் ஆவிக்குரிய பிரகாரமாயிருந்தாலும், அவனுடைய அலுவல் என்னவாயிருந்தாலும், அவன் என்ன செய்திருந்தாலும், அவன் மரித்தோரை எழுப்பியிருந்தாலும், அவன் வியாதியஸ்தரை சுகப்படுத்தியிருந்தாலும், அவன் ஒரு பிரதான பேராயராயிருந்தாலும், அவன் ரோமாபுரியின் போப்பாக இருந்தாலும், அவன் எந்த ஒரு மகத்தான தலைவனாயிருந்தாலும் கவலையில்லை. எவ்வளவு ஆவிக்குரிய பிரகாரமாயிருந்தாலும், அவன் அந்நிய பாஷைகளில் பேசியிருந்தாலும், அவன் ஆவியில் நடனமாடியிருந்தாலும், அவன் சுவிசேஷத்தை பிரசங்கித்திருந்தாலும் கவலையில்லை. அவன் என்னதான் செய்திருந்தாலும், அவனுடைய செய்தி வேதாகமத்திலிருந்து வரவில்லையென்றால், அது தவறாக இருக்கிறது. இது தேவனுடைய ஊரீம் தும்மீமாயிருக்கிறது. 50 வேதாகமம் முடிக்கப்பட்டபொழுது, தூதன் கீழே இறங்கி வந்து, யோவானிடத்தில் பேசிக்கொண்டிருந்தான். அப்பொழுது இயேசுவானவர் தாமே வந்து, “இயேசுவாகிய நான் இவைகளை சாட்சியாக அறிவிக்கும்படி என் தூதனை அனுப்பினேன். இப்பொழுது இந்த புத்தகத்தை மூடு. ஆனால் அதை முத்தரிக்காதே. யாராயிருந்தாலும் இதிலிருந்து ஏதாவது காரியத்தை வெளியே எடுத்தாலும் அல்லது எதையாவது கூட்டினாலும்…” என்றார். அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. 51 பவுல் ஆவியானவரின் ஒத்துழைப்பினால், “வானத்திலிருந்து வந்த ஒரு தூதனாவது” ஒரு பிரதான பேராயரல்ல, ஒரு போப்பாண்டவர் அல்ல, ஒரு துணை போப்பாண்டவர் அல்ல, “ஆனால் வானத்திலிருந்து வந்த ஒரு தூதனாவது இங்குள்ளதைத் தவிர வேறே எந்த செய்தியையாவது கொண்டு வந்தால், அவன் உங்களுக்கு சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன்” என்றான். 52 ஆனால் இப்பொழுது, நாம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.…அநேக வருடங்களுக்கு முன்பு, பரிசுத்த ஆவியானவரால், முன்னதாகவே நான் உங்களிடம் எப்பொழுதுமே கூறியிருக்கிறேன். ஹிட்லரும், முசலோனியும் எழும்பினபோது நான், “அது எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கும், பொதுவுடைமைக் கொள்கை முழு காரியத்தையும் எடுத்துக் கொண்டு கீழாக இறங்கி வரும்” என்றேன். 53 இப்பொழுது சபையே, உங்களுடைய கண்களை இதன் மேல் வையுங்கள். பிசாசு இந்த அறிவிப்பை செய்து கொண்டிருக்கிறான். அதுவோ—அதுவோ வேதத்தில் இல்லை. அது கல்லாதவர்களின் சிந்தையையும், ஆவிக்குரிய பிரகாரமாயிராத ஜனங்களையும் குழப்புவதற்காகவே உள்ளது. ஜனங்கள் எப்போதும் ஜீவித்ததிலேயே மிகவும் மகிமையான நாளில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். ஆயினும் அவிசுவாசிகளுக்கு ஒரு இருளான நாளாகவும், இதை அறியாத ஜனங்களுக்கு, அவர்களுக்கு மிகுந்த குழப்பமான நேரமுமாய் இருக்கிறது. நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற நாட்கள் கவனத்திற்குரியதாய் உள்ளது. உங்களுடைய நங்கூரம் பாய்ச்சப்பட்டிருக்கிறது என்பதை அறிவது என்ன ஒரு சந்தோஷமாய் இருக்கிறது. இப்பொழுது, இன்றைக்கு, நாம் இதை இந்த இருளில், பொல்லாத காலத்தில் அணுகிக் கொண்டிருக்கிறோம். 54 இப்பொழுது நான் ஜனங்களுடைய பெயர்களை அழைக்க விரும்பவில்லை. ஆனால் நான் யாரோ ஒருவருடைய பெயரை அழைக்கத்தான் போகிறேன். ஆனால் நான் அந்த வாலிப மனிதனுக்காக ஜெபிக்கிறேன். நான் எல்லா நேரத்திலுமே அவனுக்காக ஜெபிக்கிறேன். ஆனால் அவன் பிசாசின் கரங்களில் ஒரு கருவியாய் உள்ளான். அது இந்த மனிதன் எல்விஸ் பிரஸ்லியே. ஜனங்கள் பூகி—வூகி இசைக்கு அல்லது காட்டுத்தனமான ராக்—அண்ட் ரோலுக்கு போய் விட்டார்கள். அமெரிக்க ஜனங்கள் போய் விட்டார்கள். அவர்கள் அதே ஆவியைக் கொண்டு அந்த காரியத்தை சபைக்குள்ளாக கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சபை இன்னிசை சபையில் இன்னிசையாக வாசிக்கப்படுவதையே விரும்புகிறேன். சபையில் ராக் அண்ட் ரோலாக அல்ல. ஆனால் இந்த ஆவிகளை அவர்கள் பெற்றுக் கொள்ளும்போது, அதற்குப் பின்னால் ஏதோ ஒன்று உள்ளது, பிசாசு தன்னை ஒரு சவாலிடுபவனாக முன்வந்து காண்பிக்கிறான். 55 இந்த பாவமான, பின்வாங்கிப்போன பெந்தேகொஸ்தே பையன், அவன் அசைகிறதும், குலுங்குகிறதுமான தன்னுடைய நடவடிக்கைகளை, அவன் அதை சபையிலே கற்று அறிந்து கொண்டான் என்று கூறுகிறபடியே அது இருக்க நேரிடுகிறது. அவன் டென்னிஸிஸ், மெம்பஸினுடைய முதல் அசெம்பளீஸ் ஆப் காட் சபையின் ஒரு அங்கத்தினன், அவனுடைய போகதர் என்னுடைய நண்பர்களில் ஒருவர். 56 அவன் இந்த வாலிப வயதுள்ளவர்களின் சிந்தனைகளை மயக்கிக்கொண்டும், தீட்டுப்படுத்திக்கொண்டும், அவர்களை ஒரு ஸ்தானத்திற்கு கொண்டு செல்கிற பிசாசினுடைய கருவியாயிருக்கிறான். அவர்கள் கனடாவில் ஒரு இடத்தையே விட்டுச் சென்று விட்டார்கள். அங்கே அவன் இருந்த சில நாட்களுக்குப் பிறகு பதினான்கு வாலிப ஜனங்களை பைத்தியக்கார மையங்களுக்கு அனுப்பினார்கள் என்று நான் நினைக்கிறேன். தேசம் முழுவதுமே, ஆனால் ஜனங்கள் காட்டுத்தனமாயும், மூர்க்கத்தனமாயும் ஆகிவிட்டனர். 57 அவர்கள் மேலான எந்தக் காரியத்தையும் அறியாததே அவர்கள் அதைச் செய்ய காரணமாயிருக்கிறது. ஓ, அவர்கள் கர்த்தராகிய இயேசுவை அறிந்திருக்க வேண்டும் என்று எவ்வளவாய் நான் விரும்புகிறேன். அது எவ்வளவு மேலானதாய் இருக்கும்! நான் அவர்களை பழித்துரைக்கவில்லை; நான் அழிந்து போகிறவர்களுக்காக வருந்துகிறேன். நாம் ஜீவிக்கின்றதான இந்த நாட்களில், காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறவிதமாகவே அவைகள் இருக்கையில்…இப்பொழுது அது தகுதியாய் இருக்காது. 58 அமெரிக்காவின் விக்கிரகம் ஹாலிவுட் வசீகர பெண்ணாய் உள்ளது. அவள் எல்லா அமெரிக்கர்களும் பின்பற்றும் நடையை முறைப்படுத்துகிறவளாய் இருக்கிறாள். அவள் தன்னுடைய ஒழுக்கங்கெட்ட ஆடைகளோடு வெளியே வரட்டும்; நடைமுறையில் அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும், அவளுடைய நாகரீகத்தை பின்பற்றுவாள். 59 அண்மையில் ரோமாபுரியில் நின்று கொண்டிருந்தபோது, அன்றொரு நாள் அவர்கள் வைத்திருந்த செய்தித்தாளில், இந்த ஸ்திரீ ஹாலிவுட்டில் ஒரு பிள்ளையை, ஒரு ரோமனை பிரசவிக்கப் போவதாக இருந்தாள் என்பதைக் குறித்து அந்த செய்தித்தாள்கள் ஒரு தலைப்புச் செய்தியைக் கொடுத்திருந்தபோது, அது எனக்கு ஒரு இருதய வலியாக இருந்தது. என்னுடைய நண்பனான பான் வான் ப்ளோம்பர்க் (Baon Von Blomberg) அவர்களால் ஏழு வித்தியாசமான மொழிகளில் தெளிவாக செய்தித்தாளை வாசிக்க முடியும் என்று அவர்கள் செய்தித்தாளில் எடுத்துரைத்திருந்தனர். அவர், “அவள் அமெரிக்க தேவதையாய் இருக்கலாம், ஆனால் இங்கேயோ அவள் ஒரு ரோம விபச்சாரியாய் இருக்கிறாள்” என்றார். என்ன ஒரு அவமானம்! இப்பொழுது அவர்களுக்கு அந்தவிதமான காரியங்கள் இருக்கத்தான் வேண்டும். அந்த நாளின் ஆவியோடு இசைந்து போகத்தக்கதாக அது சம்பவித்தாக வேண்டும். 60 அந்தக் காரணத்தினால்தான் இந்த சபையானது மரியாளையும், மற்ற பெண்களையும், மற்ற காரியங்களையும் ஆராதித்துக் கொண்டு வருகிறது. அது ஒரு மதத் தலைமையின் கீழான அதே ஆவியாய் இருக்கிறது. அந்தக் காரணத்தினால்தான் அவர்கள் அந்த திட்டத்தை உருவாக்க கலப்படமற்ற தேவனுடைய வார்த்தையை உங்களுடைய சிந்தையிலிருந்து எடுத்துப்போட வேண்டியதாய் இருக்கிறது. 61 நாம் இருக்கின்ற சிக்கலை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்த அமெரிக்க வாலிபனை நீங்கள் பார்த்தீர்களா? அது என்ன நிலைமையில் இருக்கிறது? அதுதான் நாளைய புருஷர்களும், ஸ்திரீகளுமாய் உள்ளனர். “அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால் ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை” என்று இயேசுவானவர் கூறினதில் வியப்பொன்றுமில்லையே. ஆகையால் நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்ற என்னுடைய கருத்துக்களை இங்கே நான் அடிப்படையாக்கிக் கொண்டிருக்கிறேன். கர்த்தராகிய இயேசு சீக்கிரமாய் வருவார். 62 ஆனால் இந்த நாளின் ஆவியை, ஓ! உங்களால் காணமுடிகிறதா? உங்களுடைய சிந்தனையை எடுத்துக் கொள்ளுங்கள். என்ன சம்பவித்துள்ளது என்பதை உங்களால் காணமுடிகிறதா? அது இந்த மகத்தான கடுந்தாக்குதல் வரும் முன், மிருகத்தின் முத்திரையைக் கொண்டு வருவதற்கும், வேத வார்த்தைகளை நிறைவேற்றுவதற்கும், ஜனங்களை பலவந்தம் பண்ணவும், அதை மற்ற தேசங்களில் இருப்பது போன்றே பற்றிக்கொண்டு, அவர்கள் ஏற்றுக்கொள்ளாத காரியங்களை பலவந்தப்படுத்தி, உபத்திரவத்திற்கும், வருகிற தடைவிதிப்பதற்குமே காரணமாயிருக்கிறது. அமெரிக்கா வசீகரத்திற்கும், தேவதைக்கும் விழுந்து போயிருக்கிறதை உங்களால் காணமுடியவில்லையா? மாம்சமான ஆதிக்கத்தில் பிசாசு அதை அளிக்கும்படியான ஒரு வழியை உண்டு பண்ணுவதற்கு இது ஆதாயமாயிருக்கிறது. ஆமென். நீங்கள் இதைப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். அதிலிருந்து தெளிவாக விலகியிருங்கள். எத்தனை டி.டி.க்கள், பி.எச்.டிக்கள் அல்லது அதன் பின்னால் என்ன இருந்தாலும் எனக்கு அக்கறையில்லை. அது ஒரு பொய்யாயிருக்கிறது. 63 “எல்லா மனுஷருடைய வார்த்தையும் ஒரு பொய்யாயும், என்னுடையவைகளே சத்தியமாயும் இருப்பதாக” என்று கர்த்தர் சொல்கிறார். “ஏனென்றால் வானங்களும், பூமியும் ஒழிந்துபோம், ஆனால் என்னுடைய வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து போவதில்லை.” தேவனுடைய நித்தியமான வார்த்தையானது மனிதர்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. அதற்கு குறைவாக இருக்கிற எந்தக் காரியமும், அவைகள் நித்தியமாய் இழக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர்கள் அல்லது உங்களுடைய பெயர் எங்கே இருக்கிறது அல்லது நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. அது இழக்கப்பட்டதாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறிப்போகாது. 64 இப்பொழுது அது அவ்வளவானது. நீங்கள் அளிக்கப்பட்டுள்ள ஆவியில் அதைப் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். அருமையான கத்தோலிக்க ஜனங்களாகிய உங்களைத்தான், நான் உங்களை தரக்குறைவாக்கிக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் என்னுடைய நண்பர். நீங்கள் இல்லாதிருந்தால், உள்ளெண்ணம் என்னவாயிருந்தாலும்…நான் உங்களிடம் சண்டையிடுவதற்கு இங்கே நின்றிருந்தால், நான் பலிப்பீடத்தண்டைக்கு சென்று என்னுடைய இருதயத்தை தேவனோடு சரிசெய்துகொள்ள வேண்டுமே. நான் இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற ஒரு இருதய பாரத்துடன் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு ஆவியானது வார்த்தையின்படியாய் இதைக் கூறும்படியாய் என்னை நெருக்கிக் கொண்டிருக்கிறது. எனவே, மந்தையை எச்சரிக்க பரிசுத்த ஆவியானவர் நம்மை கண்காணிகளாக ஆக்கியிருக்கிறார். 65 தேசத்தினூடாக இருக்கிற இந்த மகத்தான நிகழ்ச்சிகளை காண்பது, சரியாக வேதத்தை பரியாசம் செய்கின்றதாயிருக்கிறது. “அது நீங்கள் களிமண் சேற்றினூடாக நடந்து செல்வது போன்று உள்ளது. ஒருவராலும் அதன்படியாய் ஜீவிக்க முடியாது” என்று கூறப்பட்டது. அதே சமயத்தில் மாம்சத்தைப் பொறுத்த மட்டில் அது சரியாய் உள்ளது. 66 ஆனால் ஒரு நபரை ஆதிக்கம் செலுத்தி வழிநடத்துகிறவர் பரிசுத்த ஆவியானவராயிருக்கிறார். கர்த்தரே நீங்கள் அந்த வியாக்கியானத்தை காணும்படி செய்வாராக. 67 தேவனுடைய வார்த்தையே ஆதியும், அந்தமும், என்றென்றைக்கும் நித்தியமானதாய் இருக்கிறது. தேவன் ஒருமுறை வார்த்தையை பேசுகிறார், அதை ஒருபோது மாற்றமுடியாது. தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்னே, “ஆதியிலே வார்த்தை இருந்தது” என்றார். “வார்த்தை” என்றால் என்ன? வெளிப்பட்ட ஒரு சிந்தையாயிருக்கிறது. பிதாவாகிய தேவன் இரட்சிப்பின் திட்டத்தைக் கண்டு, அவர் அதை நோக்கிப் பார்த்து சாத்தான் என்ன செய்திருந்தான் என்பதைக் கண்டார். அவர் திட்டமிட்டார், அவர் ஒரு திட்டத்தைக் கண்டார். இப்பொழுது அது ஒரு சிந்தனையாய் இருக்கிறது. ஆனால் அவர் அதை வெளிப்படுத்தினபொழுது அது ஒரு வார்த்தையானது. ஒருமுறை வார்த்தையாகி விட்டால் அது ஒருபோதும் மரிக்கமுடியாது. அது நித்தியமாய் இருக்க வேண்டியதாயிருக்கிறது. அவர் மாறமுடியாதது போலவே அவருடைய வார்த்தையும் மாறவே முடியாது. அவர் ஜிவனற்றவராய் ஆகமுடியாதது போல அவருடைய வார்த்தையும் ஜீவனற்றதாக ஆக முடியாது. அவருடைய வார்த்தையாயிற்றே! பண்டைய மனிதர்கள் காலங்களினூடாக இந்த வேதாகமத்தை வாசித்திருக்கின்றனர். அது எழுதப்பட்டது முதற்கொண்டே அது சபைகளை தெய்வீக ஊக்கமளித்து வந்துள்ளது. 68 நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேனானால், நீங்கள் அதைப் பாராட்டலாம். “சகோதரன் பிரான்ஹாம் நான் உம்முடைய கடிதத்தைப் பாராட்டுகிறேன்” என்று கூறுவீர்கள். அது எழுதப்பட்டது உங்கள் ஒரே நபருக்காகவே. கொஞ்சகாலம் கழித்த பின்னர் அது எனக்கு எதிராகவோ அல்லது ஒரு அத்தாட்சியாகவோ இருந்தாலொழிய அந்தக் கடிதம் மதிப்பற்றதாகிவிடும். 69 ஆனால் தேவன் ஒருமுறை உரைத்துள்ளார், அது முழு மானிட வர்க்கத்திற்குமானதாய் உள்ளது. இன்றிரவு இந்த வேளையில் அது உரைக்கப்பட்டது போல அது அவ்வளவு புத்தம்புதியதாய் இருக்கிறது. தேவன், “கிறிஸ்துவே உலக தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக இருந்தார்” என்று உரைத்தார். தேவன், அவருடைய திட்டம் மற்றும் அவருடைய சிந்தையின் மூலமாக அதை உரைத்தபொழுது, உண்மையாகவே கிறிஸ்து கடந்த நான்காயிரம் வருடங்களாக அடிக்கப்படாதிருந்தும், அவர் அங்கேயே அடிக்கப்பட்டிருந்தார். அங்கே தேவன் முன்னறிவிப்பின் மூலமாய், யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதைக் கண்டார். அங்கே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டு உலகத் தோற்றத்திலேயே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரோடு தொடர்பு கொள்ளப்பட்டோம். 70 வேதம் கூறியுள்ளது, கடைசி நாட்களில்…கவனியுங்கள். “உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரையும் அந்திக் கிறிஸ்து வஞ்சித்தான்”. வார்த்தையோடு தரித்திருங்கள். 71 இப்பொழுது நான் நம்முடைய சகோதரர்களுக்கு மத்தியில் கவனித்திருக்கிறேன், நான் இதை பயபக்தியோடு பிராட்டஸ்டண்டுகளாகிய உங்களுக்கு சொல்லுகிறேன், வெறுப்போடு அல்ல, குரோதத்தோடல்ல, ஏதோ ஒன்றை சொல்ல வேண்டும் என்றல்ல. வேறே ஏதாவது காரியத்தின் மேல் பேசுவது இலகுவாயிருக்கும். ஆனால் நான் அதை அறிவேன்… 72 வேதம், “ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது?” என்று கூறுகிறது. எதிராளி வருகின்றதை ஜாமக்காரன் கண்டு, ஜனங்களை எச்சரிக்கத் தவறிப்போனால், தேவன் அவர்களுடைய இரத்தப்பழியை அந்த ஜாமக்காரனுடைய கரத்தில் கேட்பேன் என்று கூறினார். ஆனால் ஜாமக்காரன் அவர்களை எச்சரித்தால், அப்பொழுது ஜாமக்காரன் விடுதலையாய் இருக்கிறான். 73 எனவே, நான் எச்சரிக்க வேண்டும். நம்முடைய புரட்டஸ்டென்ட் சகோதரர் மத்தியில் அநேக சமயத்தில் நான் கவனித்திருக்கிறேன், புதிய ஆவி, அதன்பின்னர் தேவனுடைய ஆவியில்…என்ற என்னுடைய செய்திக்குப் பிறகு இந்த காலையில், உங்களில் எத்தனை பேர் இன்று காலையில் இங்கே இருந்தீர்கள்? சரி. புதிய ஆவியில், தேவனுடைய ஆவியில், தேவனுடைய ஆவி இல்லாமல் புதிய ஆவியையுடையவர்கள் அநேகர் இருக்கின்றனர். இது புரிந்து கொள்ளப்பட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 74 இன்றைக்கு, புராட்டஸ்டென்ட் ஜனங்கள் மத்தியில் ஒரு பெரிய குழப்பத்தின் அசைவை நாம் கண்டறிகிறோம். நான் அவர்களுடைய சபைக்குள்ளாக செல்லும்போது, அது சில சமயத்தில் மிகவும் மன அமைதியை கெடுக்கிறதாய் உள்ளது. இப்பொழுது தயவு செய்து இதைக் கூறுவதற்கு மன்னிக்கவும். ஆனால் பரிசுத்த ஆவியைக் குறித்து…அன்றொரு நாள், அங்கே பின்னாகயிருக்கிற என்னுடைய மனைவியுடன் நான் பேசினேன். என்னுடைய உறவினர்கள் இருவர், ஒருவர் மற்றவர் முகத்தை நோக்கியவாறு அங்கே படுத்துக் கொண்டு, அவர்களுடைய ஜீவனுக்காக உரிமை கோரிக் கொண்டிருந்ததைப் போன்று நான் கண்டேன். ஒருவன் ஒரு கத்தோலிக்கனானதால் தன் கரத்தில் ஜெபமாலையுடன் கிடந்தான். இன்னொருவன் அந்தப் பக்கத்தில் ஒரு பாப்டிஸ்டாக கிடந்தான். இருவருமே என்னுடைய உறவினர்கள். நான் அவர்களை நோக்கிப் பார்த்தேன். நான், “ஓ மகத்தான தேவனே இந்தக் காரியங்கள் எப்படியாய் இருக்க முடியும்? நான் தவறிப் போய் இருக்கிறேனா? வேறு ஏதாகிலும் காரியம் இருக்கிறதா?” என்று நினைத்தேன். 75 நான் மனைவியுடன் கூறினேன். “நான் அறியாத அநேக காரியங்கள் இருக்கின்றன. ஆனால் நான் அறிந்த சில காரியங்களும் உள்ளன” என்று கூறினேன். நான், “சிறுவனாய் இருந்தது முதற்கொண்டே குளிர்காலத்தில் நான் சாரத்தை கவனித்திருக்கிறேன். இலையுதிர் காலத்தின்போது, அதின் சாரம் மரத்திலிருந்து இறங்கி அதன் வேர்களுக்குள் சென்று, தன்னை மறைத்துக் கொண்டு, குளிர் காலம் முழுவதுமாய் தன்னை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்கிறது. இயற்கைக்கு மேம்பட்டதான அதை நான் கண்டிருக்கிறேன். அது வசந்த காலத்தில் திரும்பவுமாக மேலே வந்து அதனோடு இலைகளையும், பழங்களையும் கொண்டு வருகிறது. நான் பூவை அதனுடைய கோடை அழகில் கண்டிருக்கிறேன். அது குளிர்காலத்தில் உறைபனிக்கு அதன் தலையை வணங்கி, மரிக்கிறது. விதை அழிந்து போகிறது. சதை பாகம் அழிந்து போகிறது. பின்னர் வருடத்தின் வசந்த காலத்தில் அந்த பூ மீண்டும் எழும்பி வருகிறதை நான் பார்த்திருக்கிறேன்” என்றேன். நான், “நான் விசுவாசிக்கிறேன். அவைகள் அதை செய்கிறதை நான் அறிவேன். அது யேகோவா தேவன் என்று அழைக்கப்படுகின்ற ஒருவர் என்றே நான் விசுவாசிக்கிறேன். யேகோவா தேவன் அதைச் செய்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் இயற்கையை நடத்துகிறார். நான் அவரை தேவதாரு மரத்தோடும், பப்பாளி மரத்தோடும் அல்லது பூர்ச்ச மரத்தோடும், ஆப்பிள் மரத்தோடும், ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு வித்தியாசப்படுகின்ற ஒவ்வொன்றோடும் கவனித்திருக்கிறேன். எப்படி அந்த மனிதர், ஒன்றை ஒருவிதமாயும் மற்றொன்றை ஒருவிதமாகவும் உண்டாக்கினார். யாவுமே ஒரு பிரத்தியேக சிந்தையினால் உருவாக்கப்பட்டது. அது தேவனாயிருந்தது” என்றேன். நான், “எனக்கு அது தெரியும்” என்றேன். 76 இயேசுவானவர் தேவனுடைய குமாரனாய் இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவருடைய சரீரத்தில், அவர் ஒரு மனிதனாய் இருந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் என்னைப் போன்றே ஒரு ஸ்திரீயினிடத்தில் பிறந்தார், ஆனால் அவருடைய இரத்தம் ஒரு ஸ்திரீயினுடையதல்ல; அது தேவனுடையதாய் இருந்தது. யேகோவா தேவன், லோகாஸ், அவர் பூமியின் மீதில் அசைவாடினார். (இந்தக் காலை என்னுடைய செய்தியில்) அவர் அசைவாடி முதன் மனிதனை பூமியின் தூளிலிருந்து வெளியே கொண்டு வந்தார். மரியாளின் மேல் நிழலிட்டார். அவள் மேல் அசைவாடி, அவருடைய வார்த்தையை நிறைவேற்ற, இரத்த அணுவை சிருஷ்டித்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனை கொண்டு வந்தார். ஒரு சரீரத்தில் அவர் ஒரு மனிதனாய் இருந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவருடைய ஆத்துமாவில் அவர் தேவனாயிருந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். இங்கே பூமியின் மேல் அவர் தேவனுடைய வெளிப்படுத்தலாயிருந்தார். “தேவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்து உலகத்தை தமக்கு (அவருக்கு) ஒப்புரவாக்கிக் கொண்டார்.” அவர் வெறுமனே ஒரு சாதாரண மனிதனல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசியுமல்ல என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் இம்மானுவேலாய், தேவனாயிருந்தார். அது சத்தியமாய் இருக்கிறதென்று என்னுடைய முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன். அதை சத்தியம் என்று என்னால் நிரூபிக்க முடியாது, ஏனென்றால்…அப்படி என்னால் முடிந்தால், அப்பொழுது அது விசுவாசத்திற்குரியதாய் இருக்காது. ஆனால் மரங்கள் வந்து போகின்றன என்று எனக்குத் தெரியும். எல்லா இயற்கையும் சுழலுகின்றது என்பது எனக்குத் தெரியும். உலகமானது ஒரு மகத்தான உயர்வதிகார வல்லமையினால் அதனுடைய சுற்றுப்பாதையில் பொறுத்தப்பட்டிருக்கிறது. 77 எனக்குத் தெரிந்த மற்றொரு காரியம், அதாவது தேவனுடைய கிருபையால் ஏதோ ஒன்று என்னிடத்தில் ஒரு தூதனுடைய வடிவில் ஒரு ஒளியாய் வருகிறது. அவர் எனக்கு என்ன சம்பவிக்கப் போகிறது என்ற காரியங்களைச் சொல்லுகிறார். நான் அதைக் காண்கிறேன். அது இயற்கையானது அல்ல என்பதை நான் அறிவேன். அது வருகின்ற வருடங்களின் காரியங்களை எனக்குக் காட்டுகிறது. அது ஒருமுறை கூட தவறினதேயில்லை. அது யோசேப்போடு இருந்த, தானியேலோடிருந்த, எலியாவோடிருந்த அதே தேவன் என்று நான் விசுவாசிக்கிறேன். அது ஒரு அக்கினி ஸ்தம்பத்தினால் இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தின அதே பரிசுத்த ஆவியானவராய் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். 78 ஆகையினால் ஏதோ ஒன்று உண்டு என்றும், வேதாகமம் சரியாய் இருக்கிறது என்றும் நான் திருப்திடைந்திருக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு இயற்கையும், விசுவாசம் என்று நான் அழைக்கின்ற ஒவ்வொரு காரியமும், நான் கவனிக்கின்ற, என்னால் நிரூபிக்க முடியாத ஒவ்வொரு காரியமும் சத்தியமாய் இருக்கிறதென்று இந்த வேதாகமத்தினால் நிரூபிக்கப்படுகிறது. 79 நான் இயேசுவைக் காண்கிறேன். யூதர்கள் அவர் என்னவாய் இருக்க வேண்டும் என்று நினைத்தபடி அவர் இருக்கவில்லை. மேசியாவாக இருக்க வேண்டிய ஒவ்வொரு தேவைகளையும் அவர்—அவர் நிறைவேற்றினார். அவர் மேசியாவாகவே இருந்தார். 80 அங்கே அந்த மனிதர்களின் மேலிருந்த ஆவி, அது நேராக இங்கே கீழே வந்து, அதே காரியத்தை செய்கிறதை நான் காண்கிறேன். ஆகையினால் என்னதான் பித்துக்கொள்ளித்தனமானவை எழும்பினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. நான் ஜீவிக்கின்ற தேவனுடைய வார்த்தையில் ஒரு உறுதியான விசுவாசமாய் இருக்கிறேன். 81 நான் சபைகளுக்குப் போயிருக்கிறேன். இப்பொழுது நான் இதை பயபக்தியுடன் கூறுகிறேன். நான் இதை அநேக முறை சபைகளில் கண்டிருக்கிறேன். ஜனங்கள் ஒருவர் இன்னொருவருடைய ஆவியை, பரிசுத்த ஆவிக்குப் பதிலாக பெற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் சபைக்குச் சென்று, ஒருக்கால் அங்கே போதகர் அவருடைய தலையை அசைக்கிறதை கவனித்துப் பாருங்கள்; முழு சபையுமே அதைச் செய்யும். நீங்கள் போதகர் தன்னுடைய கரங்களிலிருந்து எண்ணெய் வடிகிறது என்று கூறுகிறவருடைய சபைக்குச் செல்லுங்கள்; முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா? முழு சபையுமே அதை விசுவாசிக்கும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். நடனமும், குதிப்பும், சுற்றி ஓடுதலாய் இருக்கின்றதான சபைக்கு நீங்கள் செல்லுங்கள். நான் இந்தக் காரியங்களை பழித்துரைத்துக் கொண்டிருக்கவில்லை. நான் கவனித்தவைகளிலிருந்து வெறுமனே ஒரு குறிப்புக்காக உங்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறேன். மிகவும் உணர்ச்சிவசப்படுகின்ற ஒரு போதகர் உங்களுக்குக் கிடைத்தால் முழு சபையாருமே உணர்ச்சிவசப்படுகிறவர்களாயிருப்பார்கள். நீங்கள் ஒருவர் இன்னொருவருடைய ஆவியைப் பெற்றுக் கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். 82 ஒரு நல்ல மனிதனையும், ஒரு கெட்ட ஸ்திரீயையும் கொண்டு வந்து, ஒன்று சேர்த்து வையுங்கள். ஒருவர் மற்றவரிடத்திற்கு செல்வார். ஒன்று அவன் ஒரு கெட்ட மனிதனாக ஆவான் அல்லது அவள் ஒரு நல்ல ஸ்திரீயாக ஆவாள். “இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?” 83 நான் இதை பயபக்தியுடன் வேதத்திலிருந்து கூறுவேனாக. என் முழு இருதயத்தோடும், எனக்குள் இருக்கின்ற எல்லாவற்றோடும், ஒரு வீண் சந்தடி செய்கிறவனாக ஒருபோதும் இராதபடி நான் முயற்சித்திருக்கிறேன். ஏனென்றால் நான் அந்தக் காலையில் மூலைக்கல்லை வைத்தபோது, தரிசனத்தில், “வார்த்தையை பிரசங்கி. ஒரு சுவிசேஷகனுடைய வேலையை செய். உன்னுடைய ஊழியத்தின் முழு நிரூபணத்தை செய். ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்களுக்கு திரளாக சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங் காலம் வரும்” என்று கூறப்பட்டது. 84 சத்தியம் என்றால் என்ன? “உம்முடைய வசனமே சத்தியம்” யோவான் 17. “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களை பரிசுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம்”. இப்பொழுது… 85 நான் குற்றவாளியாயிருந்தால் தேவன் என்ன மன்னிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் இறங்கும்படியாக என் முழு இருதயத்தோடு ஜனங்களுக்கு வார்த்தையை அளிக்க நான் முயற்சிக்கிறேன். நான் நியாய தீர்ப்பில் நிற்கும்பொழுது, ஜனங்களிடமிருந்து குதித்துக்கொண்டு வருகிற ஏதோ பித்துக்கொள்ளித் தன்மையான தவளைகளின் ஆவியாய் அல்லது பறந்து கொண்டிருக்கிற பூச்சியாய், அதைப் போன்று அல்லது கரங்களிலிருந்து எண்ணெய் வடிகிறதாய் இல்லாமல், ஆனால் ஒரு வேதாகம அனுபவத்தோடு வேதத்தில் எழுதியுள்ள ஜீவிக்கின்ற தேவனுடைய வார்த்தையில் அது இருக்கிறது என்ற ஆவியாக அது இருக்கும். அதைத்தான் நான் கடினமாய் முயற்சித்திருக்கிறேன். 86 இப்பொழுது நம்முடைய சிறிய கருத்தை வேதத்திலிருக்கும் ஒரு பாத்திரத்தின் மேல் பொறுத்துவோம். இன்றிரவு ஒன்றை தெரிந்தெடுத்து, நம்முடைய கருத்துக்களை ஒன்று கூட்டிக்கொண்டு வர, அவைகளை ஒன்றோடொன்று இசைவாய் சேர்த்து, அவைகளை உங்களுக்கு அளிக்க, அதன்பின்னர் தேவன் உங்களுடைய இருதயத்தின் மேல் என்ன வைக்கிறாரோ, உங்கள் வாஞ்சை என்னவாய் இருக்கிறதோ அதை நீங்கள் செய்யுங்கள். 87 நாம் 1 இராஜாக்கள் 22ம் அதிகாரத்திற்கு திரும்பிச் சென்று நாம் இதைக் கண்டறிவோமாக. அதாவது அங்கே ஒரு மனிதன், ஒரு இராஜா ஆகாப் என்று பெயர் கொண்டிருந்தான். அவன் ஒரு மகத்தான இராஜாவாய், ஒரு யுத்த மனிதனாய், ஒரு மகத்தான மனிதனாய் இருந்தான்; ஆனால் ஒரு வெதுவெதுப்பான எல்லைக்கோடு விசுவாசியாயிருந்தான். அவன் பெயர் ஆகாப். 88 முடிவிலே, தீர்க்கதரிசியாகிய எலியா, ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி, ஆகாபின் அழிவை பிரகடனம் செய்தான். எலியா கடந்து சென்ற அநேக வருஷங்களுக்குப் பிறகு, மிகாயா என்ற பெயர் கொண்ட ஒரு தீர்க்கதரிசி இருந்தான். எனவே யோசபாத், அவனுடைய தகப்பன் ஒரு நீதியுள்ள மனிதனாய் இருந்தான், யூதாவின் இராஜாவாகிய அவன் இஸ்ரவேலின் இராஜாவாகிய ஆகாபை சந்திக்கும்படி வந்தான். 89 ஆகாப் ஒரு மகத்தான, வசீகரமான இராஜ்ஜியத்தை உடையவனாக இருந்தான். இப்பொழுது கவனியுங்கள், ஒரு மகத்தான வசீகரமான இராஜ்ஜியம், ஏனென்றால் அவனுக்கு ஒரு சிறிய, வர்ணம் தீட்டப்பட்ட யேசபேல் என்ற பெயருடைய ஒரு மனைவி இருந்தாள். அவள் சாதாரணமாக முழு தேசத்தையுமே, தெரிந்து கொள்ளப்பட்டவர்களைத் தவிர, அவளுடைய தேசத்தின் விக்கிரங்களின் பக்கமாக இழுத்துக் கொண்டாள். 90 ஓ, சகோதரரே, இன்றைக்கு அதே பிசாசின் ஆவி, அமெரிக்காவில் கிரியை செய்கிறதை உங்களால் காணமுடிகின்றதா? தேவனுடைய குமாரர்களை கிறிஸ்துவினிடத்திலிருந்து தூர இழுத்துக் கொள்ளும் நயவஞ்ச ஆவியை, குட்டி யேசபேல்களை உங்களால் காணமுடிகின்றதா? நான் இதை வேடிக்கையாகச் சொல்லவில்லை. இது கேலி செய்வதற்கான இடமில்லை. இது பிரசங்க பீடமாயிருக்கிறது. தேவனுடைய நியாயாசனம் எங்கே இருக்கிறதென்றால் இங்கேதான். வார்த்தையே தேவனுடைய நியாயாதிபதியாய் இருக்கிறது. அதாவது அவர்…அது அவருடைய நியாயத்தீர்ப்பாய், வார்த்தையாய் இருக்கிறது. 91 இப்பொழுது கவனியுங்கள். எப்படி இந்த சிறிய ஸ்திரீயானவள், அவள் அவ்வளவு ஒரு நேர்த்தியானவளாய் இருந்திருக்க வேண்டும், ஆனால் அவள் முற்றிலுமாக ஒரு தேசத்தையே அசையச் செய்தாள். 92 இன்றைக்கு நாம் எதனால் அசைக்கப்பட்டிருக்கிறோம்? நினைவிருக்கட்டும், நான் இதை முன்னறிவிக்கிறேன். அதாவது அமெரிக்கா ஒரு ஸ்திரீயை நேசிப்பவளாக இருக்கிறது. அவள் ஒரு ஸ்திரீயை ஆராதிப்பவளாய் இருக்கிறாள். அமெரிக்காவில் இருக்கிற ஆவி முற்றிலுமாக ஸ்திரீயினால் ஆண்டு கொள்ளப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒன்று சேர்ந்து கூச்சலிடும் எல்லா மது அருந்தும் அறைகளும், மனிதர்களை நரகத்திற்கு அனுப்ப முடிந்ததை விட ஹாலிவுட்டிலிருந்து வெளிவந்த இந்த சிறிய ஸ்திரீகள் வீதியில் நடந்து அதிகமான மனிதர்களை நரகத்திற்கு அனுப்ப முடியும். 93 ஆயினும் அவளுடைய சரியான நிலையில், அவள் ஒரு மனிதனுடைய இருதயத்தின் இரத்தினமாயும், தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு ஒரு ஆசீர்வாதமுமாக இருக்கிறாள். உங்களுக்கு அது புரிகின்றதா? 94 இப்பொழுது அப்படியே ஒரு வினாடி கவனியுங்கள், இல்லை, வெறுப்பாயிருங்கள் என்றல்ல, அப்படியே அமைதியாய் அமர்ந்து செவி கொடுங்கள். பரிசுத்த ஆவியானவரே அதை உங்களிடத்தில் கொண்டு வரட்டும். இப்பொழுது, இன்றைக்கு ஆகாபின் நேரத்தில் இருந்ததைப் போன்ற நிலைமைக்குள் நாம் இருக்கிறோம். சரி, ஸ்திரீயானவள் என்னவெல்லாம் கூறினாளோ, அதைத்தான் ஆகாப் செய்தான். இப்பொழுது, சபைக்குள்ளாகவும் கூட, அவர்கள் ஸ்திரீயை ஆராதிக்கிறார்கள். 95 அண்மையில் என்னுடைய நீதியான உளக்கொதிப்பு வெளியே கொண்டு வரப்பட்டது. மெக்ஸிகோவில் நான் அறிந்திருந்த, ஒரு ஏழையான, சிறிய ஸ்திரீயை, அவளைக் கண்டபோது, சொல்லப் போனால் அதிகமான மைல்கள் சூடான கற்பாறைகளில் ஊர்ந்து கொண்டே வந்து கொண்டிருந்தாள். தகப்பன் தன்னுடைய கரங்களில் ஒரு குழந்தையோடு தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருக்க, இரண்டு பிள்ளைகளில் ஒன்று அந்த தாயையே பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. அவள் அழுது கொண்டிருக்க, அவளுடைய முட்டி தோல் உரிந்து, அவளுடைய கரங்களை அந்த பாறைகளினூடே இழுத்துக்கொண்டே அழுது கொண்டிருந்தாள். எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு பரிசுத்தவாட்டி என்று கருதப்படுகின்ற ஒரு மரித்த ஸ்திரீயினுடைய ஒரு சிலையினிடத்திற்கு அவள் சென்றாள். இதை நான் குற்றமாகக் கூறவில்லை. நான் இதை தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் கூறுகிறேன். அது முற்றிலுமாக, கலப்படமற்ற, ஆவியுலக தொடர்புக் கோட்பாடாக இருக்கிறது. 96 “மனுஷனாகிய கிறிஸ்து இயேசுவையல்லாமல், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே மத்தியஸ்தரே இல்லை, அங்கே பரிந்து பேசுபவரும் இல்லை” என்று வேதம் கூறியுள்ளது. 97 ஆதி சபையானது கத்தோலிக்க சபையாக இருந்தால், பின்னர் ஏன் அவர்கள் மாற்றியிருக்கிறார்கள்? ஆதி கத்தோலிக்கம் அதை கண்டனம் செய்துள்ள அதை இந்தக் கத்தோலிக்கம் ஏற்றுக் கொள்கிறதா? “அது ஒரு ஸ்திரீயினுடைய உலகமாயிருக்கிறது”. இன்றைக்கு ஆவியாயும், கொள்கைக்குரலுமாயிருக்கிறது. அது உண்மை. அது முற்றிலும் உண்மை. 98 ஒரு ஸ்திரீயானவள் ஒரு மகத்தான ஸ்திரீயாக இருப்பாள் என்று நான் முன்னுரைக்கிறேன். இன்றிரவு இங்கே இருக்கின்ற வாலிபமான ஜனங்களே, சகோதரன் பிரான்ஹாம் அதை கூறியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் கர்த்தருடைய வருகையை கண்டபோது, நான் இதை 33ல் கூறினேன். எப்படியாய் அந்த மோட்டார் வாகனங்கள் முடிவிலே அவைகள் ஒரு முழுமையான முட்டை வடிவத்தில் வரும் வரையிலும் தொடர்ச்சியாக ஒரு முட்டையைப் போன்ற வடிவிலேயே வருகிறதாய் இருக்கும். ஒருக்கால் இங்கே உங்களில் ஒரு பகுதியினர் அதை அறிந்திருக்கலாம். அது பழைய காகிதங்களின் மேல் எழுதப்பட்டிருக்கிறது. அந்த காலையில் நாங்கள் இங்கே இந்த சிறிய (Masonic) மேசானிக் ஆலயத்தில் இருந்தபோது இல்லை அடுத்த 2-வது தெருவை கடந்துள்ள அனாதை ஆசிரமத்தில் எங்களுக்கு கூட்டங்கள் இருந்து கொண்டு இருந்தது. நான் ஒரு ஸ்திரீயானவள் எழும்புகின்றதை கண்டேன். அவள் இழிவானவளைப் போல இருந்து, தேசத்தை ஆதிக்கம் செய்தாள். உலகத்தின் முழுமையான அழிவிற்கு முன்னர், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு ஸ்திரீ, ஒன்று ஒரு ஜனாதிபதியாகவோ அல்லது ஜனாதிபதியை ஏற்படுத்தவோ அல்லது வருகிறதான ஏதோவிதமான மகத்தான அதிகாரத்திற்குள்ளாகவோ இருப்பாள் என்று நான் முன்னறிவிக்கிறேன். அதை சிந்தையில் வையுங்கள். நான் இதை கூறியிருக்கிறேன். 99 இப்பொழுது என்ன சம்பவிக்கிறது என்று கவனியுங்கள். யேசபேல் அவள் ஆகாபின் மேல் ஆளுகை செலுத்தினாள். அவள் அவனை எளிதாய் வெற்றி கண்டாள். கணவன் வெளியே குடித்து வெறித்திருக்கும்போது, பரிதாபமான தாயார் குழந்தைகளோடு வீட்டிலே தங்கியிருப்பது வழக்கமாயிருந்தது. இதுவோ ஸ்திரீயானவள் வெளியே குடித்து வெறித்திருக்கையில், இப்பொழுது அப்பா வீட்டிலிருந்து பிள்ளைகளை கவனித்துக் கொண்டிருக்கிறதாய் இருக்கிறது. இப்பொழுது இவை விளையாட்டுத்தனமான செய்திகள் அல்ல. இது உண்மையாயிருக்கிறது. நான் நீதியாயுள்ள ஜனங்களைக் குறித்து பேசிக் கொண்டிருக்கவில்லை. இல்லை ஐயா, நான் உலகத்தில் உள்ள ஆவியை மாத்திரமே காட்டிக் கொண்டிருக்கிறேன். 100 இப்பொழுது கவனியுங்கள். இது இன்னொரு வசீகரமில்லையா? ஆகாபின் காலத்தை நோக்கிப் பாருங்கள், தேசம் எப்படியாய் செழித்திருந்தது. ஓ என்னே! அப்பொழுது அது மகத்தான பொற்காலமாயிருந்தது. எப்படியாய் அந்த மாய்மாலக்கார ஆகாபின் கீழே இஸ்ரவேல் செழித்திருந்தது. உண்மையிலேயே அதன் பின்னே யேசபேலே ஆளுகை செய்பவளாக இருந்தாள். வேத பண்டிதர்களே அது உங்களுக்குத்தான். இருண்ட காலங்களில் ஆகாப் யேசபேலை மணந்துகொண்டு, விக்கிரக ஆராதனையை யூத மார்க்கத்துக்குள் கொண்டு வந்தது போன்றே. அதே வண்ணமாகவே புராட்டஸ்டென்ட் கொள்கை, கத்தோலிக்கக் கொள்கையை மணந்து கொண்டு, அஞ்ஞான மார்க்கத்தை திரும்பவும், கிறிஸ்தவ சபைக்குள்ளாக கொண்டு வந்தது. 101 இன்றைக்கு, நினைவிருக்கட்டும். புராட்டஸ்டென்ட் சபை ஒரு மகா வேசி என்று அழைக்கப்படுகின்றது. ஏனென்றால் அவளும் கூட ஒரு வேசி என்று அழைக்கப்பட்டாள். அதை நினைவில் வையுங்கள். எனவே பானை கொதிகலத்தை கறுப்பு என்று அழைக்க முடியாது. உங்களால் வாணலியிருக்கும் நெருப்பிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள தீயில் குதிக்க முடியாது. 102 ஆனால் சத்தியத்தை நாம் கவனிப்போமாக. நமக்குவேண்டியது என்னவென்றால், சத்தியமே. நாம் நித்தியத்திற்கு கட்டப்பட்ட ஜனங்களாய் இருக்கிறோம். நாம் தேவனை சந்தித்தாக வேண்டும். நாம் சத்தியத்தை கண்டறிவோமாக. 103 இப்பொழுது உங்களுக்கு விருப்பமிருந்தால், நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவன் எப்பொழுதுமே கீழே அனுப்புகிறார்…அதாவது முதலாவது காரியம் யோசபாத், நீதியுள்ள மனிதன், ஆகாபை சந்திக்க வந்தான். அப்பொழுது அவன் தொல்லைக்குள்ளானான். 104 சரியானதையும், தவறானதையும் உங்களால் ஒன்றாக கலந்து அதிலிருந்து எதையும் பெறமுடியாது. உங்களால் எண்ணெய்யை தண்ணீரோடு கலக்க முடியாது; அது கலவாது. அப்படியே நீங்களும் உங்களுடைய தொடர்புகளும், உங்களுடைய இணைப்புகளும் உலகத்தின் காரியங்களோடு இருந்துகொண்டு, இன்னமும் ஒரு ஜெப ஜீவியம் ஜீவிக்கவே முடியாது. வேதம், “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்து போங்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறியுள்ளது. இப்பொழுது புரிகின்றதா? என்ன…நீங்கள், “நல்லது, சகோதரன் பிரான்ஹாமே எனக்கு—எனக்குத் தெரியும்” என்கிறீர்கள். 105 எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் உங்களுடைய சொந்த அறிவாற்றல்களை தெரிந்து கொள்கிறீர்கள். அது வார்த்தைக்கு முரணாக இருக்கிறது. வார்த்தையே சத்தியமாயிருக்கிறது. நான் வார்த்தையை விசுவாசிக்கிறேன். 106 இப்பொழுது கவனியுங்கள். யோசபாத் ஆகாபினிடத்திற்கு வந்தான். ஓ, அவன் ஒரு பெரிய விருந்து பண்ணினான். நிச்சயமாக வீதியில் கூறும் பாணியில் நாம் அதை கூறினால், “ஒரு பெரிய பரபரப்பான விருந்து” என்றே இன்றைக்கு அழைப்போம். அவன் எல்லாரையும் அழைப்பித்தான். அவர்கள் ஆடு, மாடுகள் முதலானவைகளை அடித்தனர். அவர்கள் மத்தியில் ஒரு மகத்தான விருந்து உண்டாயிருந்தது. அங்கேதான் ஒரு விசுவாசி தொல்லைக்குள்ளாகிறான். 107 “ஓ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் வெறுமனே ஒரு குறுகிய மனப்பான்மையுள்ளவர்கள், அந்த சிறிய பரிசுத்த உருளையர் ஸ்தலம் அவ்வளவுதான். நீங்கள் பெரிய சபைக்கு வர வேண்டும். நீங்கள் வரத்தான் வேண்டும். ஓ, நீங்கள் பார்க்க வேண்டுமே! எங்களுடைய போதகர் ஒரு D.D., D.D., Ph. D.,” நீங்கள் பாருங்கள். “எங்களுடைய—போதகர்! எங்களுடைய பாடல்குழுவினர் தேவ தூதர்களைப் போன்று பாடுகிறார்கள்.” அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்கு முரணாயிருந்தால், அதனோடு அது ஏதும் செய்கிறதில்லை. இப்பொழுது… 108 அவர்கள் அந்த எருதுகளை அடித்தபோது, ஒரு பெரிய விருந்து செய்தனர். ஆகாப் அதில் இன்னொரு காரியத்தை உடையவனாயிருந்தான். அவனுடைய உட்கருத்துக்கள் தவறாயிருந்தன. அவன் ஒரு பெரிய பகட்டானதை செய்து, யோசபாத்திற்கு வலை விரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். 109 இன்றைக்கும் பிசாசும் அதைத்தான், அதே காரியத்தைச் செய்யவே முயற்சித்துக் கொண்டிருக்கிறான். “நல்லது, நாம் பெருவாரியான எண்ணிக்கையில் உள்ளோம்.” நிச்சயமாகவே. 110 தேவனுடைய சபையானது இயேசுவானவர் வரும் வரைக்குமாய் எப்பொழுதுமே சிறுபான்மையாகவே இருந்து கொண்டிருக்கும். “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு இராஜ்ஜியத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்”. அது உண்மை. நாம் குறைவானவர்களாய் இருக்கிறோம். ஆனால் அதெல்லாம் சரி. தேவன் அங்கே இருக்கும் வரைக்கும், அது எனக்கு பெருவாரியாகவே இன்னமும் இருக்கிறது. அது உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் என்பதை நான் அறிவேன். “ஏனென்றால் தேவன் உங்கள் பட்சத்தில் இருந்தால் உங்களுக்கு விரோதமாய் இருப்பவன் யார்?” 111 இப்பொழுது, ஆனால் அவன் அதன் பின்னே ஒரு நோக்கத்தை உடையவனாய் இருந்தான். அவன் அதைச் செய்தபோது, அவன், “இப்பொழுது இங்கே இருக்கிற நம்மெல்லாருக்குமே, குறிப்பிட்ட ஒரு பெரிதான நேரம் உண்டாயிருக்கிறது. கீலேயாத்திலுள்ள ராமோத்தின் மேல் யுத்தம்பண்ண என்னோடே நீங்கள் வருகிறீர்களா?” ஏனென்றால், உண்மையாகவே சீரியர் அங்கே அதை வைத்திருக்கின்றனர். ஆனால் ராமோத் கீலேயாத்தோ எனக்குச் சொந்தமானது. நியாயமானதாய் இருக்கிறது. நமக்கு அந்த உரிமை உண்டு. நாம் தான் ஆதி சபை. நமக்கு உரிமை உண்டு” என்றான். உங்களுக்கு அது புரிகின்றதா? 112 அதற்கு யோசபாத், “இருக்கட்டும், இப்பொழுது நமக்கு ஒரு அருமையான நேரம் இருக்கின்றபடியால்,” என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்களைப் போன்று இருக்கிறார்கள். ஏன்? நாமெல்லாருமே விசுவாசிகளாய் இருக்கிறோம். எனவே எப்படியாயினும் நாம் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றான். அவன் ஒரு மிக முக்கியமான தவறைச் செய்தான். அவன் செய்து விட்டான். யோசபாத் போதுமான அளவு ஆவிக்குரியவனாய் இருந்தபடியால்… 113 அது இந்த நாளின் ஒரு பாவனையாயிருந்தது என்று என் முழு இருதயத்தோடு நான் நம்புகிறேன். நிச்சயமாக எங்கேயோ, எப்படியோ தேவன் இருதயத்தில் உண்மையாயிருக்கிறவர்களுக்கு செய்தியை சென்றடையச் செய்வார். ஆதியிலே அவர் செய்வதாக சொன்னார். எனவே அவர் ஒரு திட்டத்தைத் தீட்டியுள்ளார்.…[ஒலிநாடாவில் காலி இடம்] அதனோடு அப்படியே இசைந்து இருங்கள். 114 இப்பொழுது அவனைக் கவனியுங்கள். அவன், “நிச்சயமாக நான் உன்னோடு வருவேன். ஆனால்,” என்றான். அவன், “ஒரு நிமிடம் பொறும். நாம் போவதற்கு முன்பாக, நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீர் அப்படி நினைக்கவில்லையா? நாம் எல்லோரும் விசுவாசிகளென்றால், அப்பொழுது நாம் கர்த்தரிடத்தில் விசாரிப்போம்” என்றான். 115 “நல்லது,” அதற்கு ஆகாப், “நிச்சயமாக, அது சரியே. ஓ, நான் ஏன் அதைக் குறித்து நினைக்கவில்லை? நிச்சயமாக, நான் அதை நினைத்திருக்க வேண்டும்” என்றான். “அங்கே தேசத்தில் மேலான நானூறு தீர்க்கதரிசிகள் என்னிடத்தில் இருக்கிறார்கள். நான் அவர்கள் எல்லோரையும் நன்றாய் உடுத்துவித்திருக்கிறேன். அவர்களெல்லாரும் D.D.D.’S., Ph. D.’S, களையும் மற்றும் எல்லாக் காரியங்களையும் பெற்றுள்ளனர். இங்கே தீர்க்கதரிசிகளுக்கு, அவர்களுக்கு ஒரு பெரிய ஸ்தாபனம் இருக்கின்றது. எனவே நான் அவர்களை இங்கே கொண்டு வருவேன். அவர்கள் என்ன கூறுகிறார்களென்று நாம் பார்ப்போம்” என்றான். 116 உங்களுக்குத் தெரியும். அது யோசபாத்தை சரியாகத் தொடவில்லை. அவன் அழைத்தனுப்பினான்… 117 எனவே அவர்கள் போய் அந்த நன்றாக போஷிக்கப்பட்ட, நன்றாக உடுத்துவிக்கப்பட்ட நானூறு தீர்கதரிசிகளையும் அங்கே கொண்டு வந்தார்கள். ஆகாப் அவனுடைய சொந்த செலவிலேயே அவர்களை போஷித்தான். ஏனென்றால் அவன் என்ன செய்யச் சொன்னானோ, சரியாக அதையே அவர்கள் செய்யும்படி அவன் வைத்திருந்தான். 118 அங்குதான் காரியம். அங்குதான் நீங்கள் இருக்கிறீர்கள். ஓ, நிச்சயமாக, “இங்கே நாங்கள் மகத்தான சபைகளையும், மகத்தான பெரிய ஸ்தலங்களையும் உடையவர்களாயிருக்கிறோம்.” ஆனால் அநேக சமயங்களில், பிரசங்கியார் இருபது நிமிடங்களுக்கு மேலாக பிரசங்கித்தால், கண்காணிகள் வாரியம் அந்தப் பிரசங்கியாரை வெளிநீக்கம் செய்துவிடும். ஆனால் உம்முடைய இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. ஒரு தேவனுடைய மனிதன் அந்த அர்த்தமற்றவைக்கு செவி கொடுக்கமாட்டான். உண்மை. அவர் பாவத்தை மிக அதிகமாக சுட்டிக்காட்டுவாரேயானால், ஏன்? முழு சபையாருமே அவரை வெளியேற்ற வாக்களிப்பர்; ஆனால் அதற்குக் காரணம் அவர் ஒரு ஸ்தாபனத்தில் இருக்கிறார். ஆனால் தேவனுடைய சபையில் நீங்கள் ஓட்டளிக்கப்பட்டு உள்ளேயோ அல்லது வெளியிலோ கொண்டு வரப்படுவதில்லை. நீங்கள் ஒருமுறை அதற்குள்ளாக என்றென்றைக்குமாய், நித்தியமாக பிறக்கிறீர்கள். தேவனால் மட்டுமே உங்களை வெளியே தள்ளமுடியும். அவர் அதை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று அவர் தம் மேலேயே ஆணையிட்டார். ஆமென். அவர் உன்னை உள்ளே கொண்டு வருவதற்கு முன்னரே நீ எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறாய் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நம்முடைய ஸ்தாபனங்கள் அவர்களை தற்காலிகமாக முப்பது நாட்கள் அல்லது அறுபது நாட்கள் அல்லது தொண்ணூறு நாட்கள் என்று குறிப்பிட்ட கால தேர்வாய்வு பயிற்சியைக் கொடுக்கிறார்கள். அவர் தம்முடைய வேலையை அதே போன்று நடத்துவதில்லை. அவர்கள் பேசுவதற்கு முன்னரே, அவர்கள் சபைக்குள்ளாக வருவதற்கு முன்னரே அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர்கள் சரியாக எதனால் உருவாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அந்தக் காரணத்தினால்தான் மறுபடியும் பிறக்க வேண்டியதாயிருக்கிறது. 119 இப்பொழுது, அவன் அவர்களெல்லாரையும் அங்கே கொண்டு வந்தபொழுது, அவன் ஒரு சிங்காசனத்தின் மேல் அமர்ந்தான். இன்னொருவன் தன்னுடைய சிங்காசனத்தின் மேல் அமர்ந்தான். அவர்கள் அங்கே அமர்ந்தனர். “எல்லா பிரசங்கிமார்களையும், தீர்க்கதரிசிகளையும் கொண்டு வாருங்கள்” என்றான். அவர்களெல்லாரும் வெளியே வந்து, தங்களுடைய திட்டமிட்ட கட்டுப்பாட்டு அசைவினூடாகச் சென்றனர். அவர்களுக்கு ஒரு பெரிய நேரம் உண்டாயிருந்தது. சரி. 120 அவன், “இப்பொழுது அவர்கள் பார்ப்பதற்கு அருமையாயிருக்கிறார்களல்லவா? அவர்கள் உபயோகிக்கும் சொல்வன்மையைக் கவனியும்” என்றான். ஓ, என்னே! எப்படியாய் அவர்களால் பெருமையாய் பேச முடிகிறது, உமக்குத் தெரியுமே!. ஓ, “ஆ ஆ ஆ ஆ ஆ—மென்”. அவர்களினூடாகச் சென்ற திட்டமிடப்பட்ட கட்டுப்பாட்டு அசைவுகளே இவை யாவும். அவர்கள் அங்கே ஒரு முழு கலப்பாய் இருந்து கொண்டிருந்தனர். அவர்கள் அவை யாவையும் உடையவர்களாயிருந்தனர். 121 எனவே, முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியும். அவன், “போம்! ‘போங்கள்’ என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்றான். 122 அவன், “இப்பொழுது யோசபாத்தே, நீர் பாத்திரரா? பாருங்கள், பார்க்கப்போனால் நான் சரிதான்” என்றான். 123 ஏன்? என்ன சொல்ல வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை நன்றாய் அறிந்திருந்தனர். இல்லையென்றால் அவர்கள் தங்களுடைய நற்சான்று பத்திரங்களை இழந்துவிட்டிருப்பர். ஓ, ஆம், ஐயா. மாகாண மனிதன் வந்தான். மாநில மூப்பர் இன்னும் மற்றெல்லாரும், இவர்கள் எல்லாரும் தங்களை போஷித்துக் கொண்டிருந்த கரத்தைக் குறித்து நல்ல காரியங்களை சொல்லவில்லையென்றால், உடனடியாக அவர்கள் வெளியேற்றப்பட்டிருப்பார்கள் என்பதை நான் குறிப்பிடுகிறேன். ஏனென்றால் எது எப்படியாயினும் அவர்கள் அறிந்த எல்லாப் பொருட்களுமே உணவுதான். 124 அங்கே ஒரு காயப்பட்ட கரம் இருக்கிறதற்காக நான் சந்தோஷப்படுகிறேன். அதுவே தேவனுடைய சபையை போஷிக்கிறது. 125 கவனியுங்கள், அதன் பின்னர் அவர்களெல்லாருமாய் தீர்க்கதரிசனம் கூறுகின்றதை நான் காண்கிறேன். ஓ, ஆம், இராஜாவே! கர்த்தர் உரைக்கிறதாவது, “போம்!” இப்பொழுது வினோதமான காரியம் என்னவென்றால், அவர்கள் உண்மையாகவே ஏவப்பட்டிருந்தனர். 126 ஆனால் இப்பொழுது கவனியுங்கள். அந்தவிதமான ஒரு ஏவுதல் தேவனுடைய மனிதனாகிய யோசபாத்தை தொடவில்லை. அவன், “ஒரு நிமிடம் பொறும். நான் இங்கே ஒரு சிறு தவறை செய்து விட்டேன் என்று நினைக்கிறேன். ஏதோ காரியம் தவறாக இருக்கிறது. நான் இதில் கலந்து கொண்டிருக்கவே கூடாது” என்றான். புரிகின்றதா? மாடு தன் எஜமானுடைய தொழுவத்தை அறிந்திருக்கிறது. பார்த்தீர்களா? அங்கு…அவன், “ஹு, ஹு, என்னை மன்னிக்கவும். திரு. ஆகாப் இராஜாவே, ஆனால், ஹு, இன்னொருவன், இன்னொரு தீர்க்கதரிசி உம்மிடத்தில் இல்லையா?” என்றான். 127 ஏன்? ஆகாப்போ, “நல்லது, நானூறுபேர் ஒருமனதோடு அதிலும் சிறந்த பாண்டித்யம் பெற்றவர்களை நாம் பெற்றுள்ளோம். அவர்கள் ஏக சிந்தையாய், ‘இதுதான் தேவனுடைய சித்தமாயிற்றே! இதுதான் தேவனுடைய சித்தமே!” என்று கூறுகிறார்களே என்று கூறியிருக்கலாம். 128 அவன், “இது எப்படியோ எனக்கு சரியாகத் தோன்றவில்லை” என்று தன்னுடைய இருதயத்திற்குள் கூறிக்கொண்டான். ஆமென். ஓ, தேவனுடைய வார்த்தையைப் போன்று தெரியவில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். அவன், “இன்னொருவன் அங்கே இல்லையா?” என்றான். 129 இப்பொழுது கவனியுங்கள். அதற்கு ஆகாப், “ஆம், எங்களிடத்தில் ஒரு பரிசுத்த உருளை இருக்கிறான். மிகாயா என்ற பெயர் கொண்ட ஒருவன் எங்களிடம் இருக்கிறான். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் அவனை வெறுக்கிறேன்” என்றான். ஓ, ஆம்! அவன் தொடர்ந்து, “எங்களிடத்தில் இன்னுமொருவன் இருக்கிறான். ஆனால் அவன் எங்களுடைய ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன் அல்ல. நீண்ட நாட்களுக்கு முன்பே அவர்கள் அவனை வெளிநீக்கம் செய்து விட்டனர். அவன் அங்கு எங்கேயோ மலையின் மேல் இருக்கிறான். அவனுடைய பெயர் மிகாயா” என்றான். 130 அதற்கு யோசபாத், “அவன் என்ன கூறுகிறான் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான். ஆமென். உங்களுக்கு அது புரிகின்றதா? இன்றைய நாளின் ஒரு பாவனை. “இன்னும் ஒருவன் அங்கில்லையா?” என்றான். 131 அதற்கு அவன், “ஆம், ஆனால் ஓ, அவன் ஒரு மதவெறியவனாயிற்றே! அவன் எப்பொழுதுமே என்னக் குறித்து மோசமான காரியங்களையே கூறுகிறான்” என்றான். தேவனுடைய வார்த்தை அவனைக் குறித்து கேடான காரியங்களை கூறியிருக்கும்பொழுது, அவனால் எப்படி மற்றெதையாவது கூறமுடியும்? “ஏன்? அவன் நம்முடைய ஸ்தாபனத்தையும் கூட பழித்துரைக்கின்றான். ஏன், அவன் சபையை உடைப்பவன். அங்கே இருப்பதெல்லாம் அவ்வளவுதான். தீர்க்கதரிசிகள் அவனைக் கொண்டு போய் அவனுக்கு அவனுடைய இளங்கலை படத்தை கொடுக்க முயற்சித்தார்கள். ஆனால் ஓ, அவனோ அமைதியாக இருக்க மனமில்லாதிருந்தான். அவன் அங்கிருந்து காலை அழுத்தி தரையில் உதைத்துவிட்டு வெளியேறினான். அவன் வெறுமனே ஒரு வயோதிப மதவெறியன்” என்றான். புரிகின்றதா? 132 யோசபாத் தன்னுடைய தகப்பனிடத்திலிருந்து அவனைப் பற்றி அறிந்து கொள்ள போதுமான தேவனுடைய ஆவியை உடையவனாய் இருந்தான். அவன், “அவன் கூறுவதை நான் கேட்க விரும்புகிறேன். போய் அவனைக் கொண்டு வாருங்கள்” என்றான். 133 “நல்லது. நான் உன்னை எச்சரித்துக் கொண்டிருக்கிறேன், நான் உன்னை எச்சரித்துக் கொண்டிருக்கிறேன். அவன் ஒவ்வொரு காரியத்தையும் குழப்புகிறவன். மற்றவர்களுக்கு இருபது போன்று அந்த பெருந்தன்மையை அவன் பெற்றிருக்கவில்லை” என்றான். “நான் அவனுக்கு செவி கொடுக்க விரும்புகிறேன்.” “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கும். அவைகள் அந்நியனின் பின்னே செல்வதில்லை” 134 யோசபாத் தேவனுடைய செம்மறியாட்டுக் குட்டிகளில் ஒன்றாய் இருக்க நேர்ந்தது. அவன், “அது சரியான சத்தமாய் தோன்றவில்லை” என்றான். அது ஏதோ ஒரு சலசலப்பை உடையதாயிருக்கிறது. ஆனால் அதில் ஒரு மணியோசையே இல்லாதிருந்தது. சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் அது சரியான சத்தத்தை எழுப்பவில்லை. “காய்ந்துபோன பசுத்தோலின் மேல் பட்டாணிகளை கொட்டுவது போலிருக்கிறதே” என்று வழக்கமாக ராய் டேவிஸ் (Roy Davis) அவர்கள் கூறுவது போன்று உள்ளது. “அது சரியான சத்தமாய் தோன்றவில்லை.” 135 அவன், “நீங்கள் மதவெறியன் என்று அழைக்கிற இந்த நபர் கூறுகின்றதை நான் கேட்கட்டும். உங்களுடைய ஸ்தாபனத்தோடு சேர்ந்து கொள்ள விரும்பாத ஒருவன் தன்னுடைய சொந்த கருத்துக்களை உடையவனாக இருக்கிற ஒருவன், கூறுவதைக் கேட்கட்டும்” என்றான். ஏனென்றால் அந்த மனிதனிடத்தில் சத்தியம் இருக்க வேண்டும் என்று அவன் அறிந்திருந்தான். ஏனென்றால் அது சரியானதல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே அவன், “அப்படியானால், நான் அவனை அழைத்து வரும்படி அனுப்புவேன்” என்றான். 136 எனவே அவர்கள் குன்றுக்குள்ளாகவும், சந்துக்குள்ளாகவும், அவன் எங்கெல்லாம் பிரசங்கித்துக் கொண்டிருந்தானோ, அங்கே அல்லது அந்த சிறிய ஊழிய ஸ்தலத்தை நோக்கிச் சென்றனர். இதோ ஒரு தூதுவன் உள்ளே வருகிறான். 137 அவர்கள் சென்றிருந்தபொழுது, ஓ, என்னே, அவர்களுக்கு ஒரு வெறியெழுச்சி இருந்ததா? ஏன், அங்கே ஒரு நபர், சிதேக்கியா என்னும் பெயர் கொண்டவன், அவன் சென்று அவனுடைய தலையில் கொம்புகளை மாட்டிக் கொண்டான். ஓ, சகோதரனே அவன் சரியான வெளிப்பாட்டைப் பெற்றிருந்தான். அவனுடைய கரத்தில் எண்ணெய், மற்றெல்லாக் காரியங்களும் இருந்தன. அவன் ஒரு நேரத்தை உடையவனாயிருந்தான். ஆம் ஐயா. “ஓ, கர்த்தர் உரைக்கிறதாவது, எப்படியாய் நாம் அந்த சீரியரை அப்படியே திரும்ப அவர்களுடைய தேசத்திற்குள்ளாக இந்த கொம்பிகளினாலே தள்ளிவிடப் போகிறோம்”. அவர்கள் அங்கே ஒரு நேரத்தை உடையவர்களாய் இருந்தனர். ஆகையால் வந்திருந்த அந்த தூதுவன், “மிகாயா”? என்றான். “ஆம்” என்றான். “நீர்தான் இம்லாவின் குமாரனா?” “ஆம், நான்தான்” “நீர்தான் அந்த மதவெறி கொண்ட, பரிசுத்த உருளையான அந்த தீர்க்கதரிசியா?” “நல்லது, அது நான்தான் என்று நான் நினைக்கிறேன்.’’ “நல்லது, இராஜா உன்னைக் காண விரும்புகிறார்” 138 “ஓ, அவர் காண விரும்புகிறாரா?” மிகாயா அதை முன்பே அறிந்திருந்தான் என்பதில் சந்தேகமில்லை. அங்கே கூடி வந்திருக்கும் கூட்டமெல்லாம் எதைக் குறித்தது என்பதை கர்த்தர் அவனுக்கு ஏற்கனவே கூறியிருந்தார். எனவே அவன் எழும்பினான். 139 ஆகவே, அவன், “இப்பொழுது ஒரு நிமிடம் பொறும், நீ இந்த எழுப்புதலை துவங்கும் முன்பு, நீ என்ன பிரசங்கிக்க வேண்டும் என்பதை நான் உனக்கு சொல்லப் போகிறேன். இப்பொழுது மற்றெல்லா பிரசங்கிமார்களும் இந்தக் காரியங்களைக் குறித்து பிரசங்கிப்பது இல்லை. நீ குதிரை பந்தையத்தைக் குறித்து ஒன்றும் சொல்லாதே. அதை மற்றும் இதை அல்லது இதைப் பற்றி நீ ஒன்றுமே கூறாதே. ஏனென்றால் நீர் பாரும், மற்ற பிரசங்கிமார்கள் அதைக் குறித்து ஒன்றும் கூறுவதில்லை” என்றான். மேலும், “அவர்கள் கூறுகின்ற அதே காரியத்தை நீயும் சொல்” என்றான். இப்பொழுது அது என்னவாய் இருந்ததோ அதுவே இன்றைக்கும் இருக்கும். 140 இப்பொழுது வேத வார்த்தை என்ன கூறுகிறதோ அதைத்தான் நாங்கள் கூறப்போகிறோம். அவன், “மிகாயாவே மற்ற தீர்க்கதரிசிகள் நம்முடைய இராஜாவுக்கு நல்லதாய் தீர்க்கதரிசனம் உரைத்தனர். இப்பொழுது மற்றபடி, அவர் கௌரவமான மனிதர் என்பது உனக்குத் தெரியும். இப்பொழுது அவர்கள் அவருக்கு கூறுகிற அதே காரியத்தையே நீயும் கூறி, நன்மையாக தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும்” என்றான். 141 அதற்கு அவன், “கர்த்தர் உரைக்கிறதாவது என்னவோ, அதை மட்டுமே நான் சொல்லுவேன் என்று என் தேவனுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்” என்றான். ஆமென். தேவன் நமக்கு சில மிகாயாக்களை கொடுப்பாராக. வார்த்தையோடு தரித்திருங்கள். மற்றவர்களிடம் இருந்ததான விநோதமான காரியங்களை இவன் உடையவனாய் இல்லாதிருக்கலாம். மற்றவர்களிடம் இருந்ததான Ph.D. பட்டத்தை இவன் பெறாமலிருந்திருக்கலாம். அவனுக்கு சமுதாயத்தில் நன்மதிப்பு இல்லாதிருந்திருக்கலாம். ஜனங்கள் முன்னிலையில் அவன் ஒருக்கால் அந்த மகத்தான D.D. பட்டத்தைப் பெறாமலிருக்கலாம். ஆனால் அவனோ வார்த்தையை உடையவனாயிருந்தான். ஆமென். ஓ, அதுதான் அது. தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்வார் என்று அவன் அறிந்திருந்தான். ஆகவே அவன், “என்ன சொல்லும்படி என்னிடம் தேவன் சொல்லுகிறாரோ, நான் தேவன் கூறுகிற அதே காரியத்தையே கூறுவேன்” என்றான். 142 வந்து கொண்டிருக்கிற இந்த நாட்களை தேவன் முன்னறிவிக்கிறார் என்றால், அது இந்த தவறான காரியமான ஸ்திரீகளை ஆராதிப்பது அல்லது பரிசுத்தவான்களின் பரிந்து பேசுதல் அல்லது பரிசுத்தவான்களோடு அளவளாவுதல் இவைகளை முன்னறிவிக்கிறது. இந்த அர்த்தமற்ற எல்லாக் காரியங்களையும், மற்ற காரியங்களையும் அவர் கண்டனம் செய்கிறாறென்றால், உதாரணமாக, “யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல இவர்களும் இந்தக் கடைசி நாட்களில் எதிர்த்து நிற்பார்கள்” நான் தேவனுடைய வார்த்தையில் அந்தக் காரியத்தை கண்டனம் செய்து அது தவறென்று கூறுகிறேன். 143 வார்த்தையோடு தரித்து இருங்கள். நீங்கள் எவ்வளவு பரபரப்பை உங்கள் உள்ளத்தில் உணர்ந்தாலும், நீங்கள் எவ்வளவுதான் குதித்து கூச்சலிட்டாலும், உங்களால் எவ்வளவாய் இதையும், மற்றதையும் செய்ய முடிந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவனுடைய ஆவியானது தேவனுக்கு முன்பாக உங்களை ஒரு சுத்தமான, பரிபூரணமான ஜீவியத்திற்கு வழிநடத்தவில்லையென்றால், அந்தக் காரியத்தையே கண்டனம் பண்ணிவிடுங்கள். உன்னிலிருந்து எண்ணெய் புறப்பட்டு ஓட வேண்டும் என்று தேவன் விரும்பியிருந்தால், அவர் உன்னை ஒரு ஒலிவ மரமாய் உண்டாக்கியிருப்பார். அல்லது ஒரு டெக்ஸாஸ் எண்ணெய் கிணறாய் உண்டாக்கியிருப்பார். நான் உங்களுக்கு ஒன்றை சொல்லட்டும், தேவன் ஒவ்வொரு காரியங்களுக்கான நோக்கங்களையும் உடையவராய் இருக்கிறார். வார்த்தையோடு தரித்திருங்கள். வேதம் என்ன கூறுகிறதோ, அதனோடு தரித்து இருங்கள். அது தேவனுடைய ஊரீம் தும்மீமாயிருக்கிறது. 144 தீர்க்கதரிசியாகிய வயதான மிகாயா, தேவனுடைய வார்த்தையோடு தரித்து இருந்தான். ஒரு சிங்கத்தைப் போன்று தைரியமாக அங்கே நடந்து வந்தான். அவன் எங்கே நின்று கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறிந்திருந்தான். கவனியுங்கள். ஓ, சகோதரனே! மற்றவர்களும் கூட ஒரு தரிசனத்தை உடையவர்களாயிருந்தனர். ஆனால் அவர்களுடைய தரிசனம், தேவனுடைய வார்த்தையோடு ஒத்துப் போகவில்லை. ஆனால் மிகாயாவினுடையதோ தேவனுடைய வார்த்தையோடு ஒத்து இருந்தது. ஏனென்றால், தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்த ஞானதிருஷ்டிக்காரனும், தீர்க்கதரிசியுமாகிய எலியா, ஆகாபுக்கு என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை ஏற்கனவே கூறியிருந்தான். எனவே, கேடு சம்பவிக்கப் போவதாக இருக்கிறது என்று தேவனுடைய வார்த்தை கூறியிருக்கும்பொழுது, மிகாயாவினால் எப்படி ஏதோ ஒன்று நன்மையாக சம்பவிக்கப்போவதாக இருக்கிறது என்று கூறியிருக்க முடியும்? எனவே அவன் வார்த்தையோடு இருந்தான். 145 சகோதரனே, கூரான கோபுரம் எவ்வளவு உயரமாயிருந்தாலும், அல்லது எப்படியாய் நன்கு உடை உடுத்திய ஜனங்கள் சென்றாலும், போதகர் எந்தளவு கல்வி கற்றிருந்தாலும் அல்லது இதைக் குறித்து எந்தக் காரியமாயிருந்தாலும், அல்லது பேராயர். சீன் என்ன கூறினாலும் அல்லது வேறு யாராவது என்ன கூறினாலும் கவலைப்படாதீர்கள். அது வார்த்தைக்கு முரணாக இருந்தால், அதினின்று விலகியிருங்கள். வார்த்தையில் தரித்து இருங்கள். அங்கேதான் ஒரு உண்மையான தேவனுடைய மனிதன் சரியாக அந்த வார்த்தையின் மேல் இருக்கிறான். அது உண்மை. 146 மிகாயா அங்கே நடந்து சென்று, அவன் தன்னுடைய தரிசனத்தைக் கண்டான். அவன் தீர்க்கதரிசனம் உரைத்து தரிசனத்தைக் கண்டபோது, அது வார்த்தையோடு சரியாக ஒத்துப்போகிறதையும், அதனோடு பொருத்தமாய் இருக்கிறதையும் அவன் கண்டான். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை அவன் உடையவனாய் இருந்ததை அவன் அறிந்திருந்தான். அங்கேயே நடந்து சென்றான். 147 அவன், “இம்லாவின் குமாரனாகிய மிகாயாவே, நான் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு போக வேண்டுமா அல்லது நான் விலகிக் கொள்ள வேண்டுமா?” என்றான். அதற்கு மிகாயா, “போம்” என்றான். 148 “இப்பொழுது, அது எனக்கு சரியாய் தோன்றவில்லை” என்றான். அவனும் கூட மேலாய் அறிந்திருந்தான். 149 மக்களின் பாராட்டுக்குரியவர்களாய் இருக்கும்படியாக அநேக ஜனங்கள் அந்த பெரிய தரமான காரியங்களில் சேர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் வித்தியாசமாய் அறிந்திருக்கிறார்கள். அவர்களிடத்தில் மட்டும் அவைகளைக் குறித்த ஒரு பொறி ஜீவன் இருந்தால், உலகத்தில் கிரியை செய்கிற ஜீவனின் ஆவியானது அவர்களுக்கு அந்த வித்தியாசத்தைக் கூறும். தவளைகள் குத்திக்கிறதும், பூச்சிகள் பறக்கிறதும், குலுங்குதலும், ஓடுதலும், மற்றெல்லாக் காரியங்களும் இவைகளெல்லாம் முரணாக இருக்கிறது என்று அவர்கள் அறிந்திருக்கும்பொழுது, இப்படிப்பட்டதான மூடத்தனமானவைகளின் பின்னே அவர்கள் போகிறார்கள். ஆனால் அவர்கள் இதனோடு போகிறார்கள், ஏனென்றால் உணர்ச்சி வசப்படுதல்களைக் குறித்து யார் கவலைப்படுகிறார்கள்? 150 கர்த்தர் உரைக்கிறதாவது, அது உண்மை என்று வார்த்தை கூறுகிறதே எனக்கு வேண்டும். இப்பொழுது ஒரு இருதயத்தில் உணரப்பட்ட ஒரு மார்க்கத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. எனக்கு பரிசுத்த ஆவியின் வல்லமையில் நம்பிக்கை உண்டு. எனக்கு தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை உண்டு. எனக்கு வரங்களின் வெளிப்படுதல்களில் நம்பிக்கை உண்டு. ஆனால் அவைகள் பயபக்தியோடு சரீரத்தில் பொருத்தப்பட்டு, கிரியையில் சரியாக வார்த்தையோடு இசைந்திருக்க வேண்டும். 151 நான் ஒரு இடத்திற்குச் சென்று, பிரசங்கிக்கத் துவங்கி, ஒரு பீடத்து அழைப்பை விடுவிக்கும்போது, ஒரு ஸ்திரீ எழும்பி, அந்நிய பாஷையில் பேசுகிறாள். என்ன ஒரு அவமானம்! அது என்ன ஒரு பரிதாபமாக இருக்கிறது. அது அவர்களுடைய போதகர் வார்த்தையில் இல்லை என்பதைக் காட்டுகிறது. இல்லையென்றால் அவர் அந்த காரியத்தை நிறுத்தி, “நீ அதைச் செய்யக்கூடாது” என்று கூறியிருப்பார். புரிகின்றதா? வரத்திற்கு எதிராக ஒன்றுமில்லை; அது தவறாக உபயோகப்படுத்தப்படுகிறது. புரிகின்றதா? 152 நான் அநேக காரியங்களை அதனோடு மணிக்கணக்காக எடுத்துக் கொள்ள முடியும். நான் என்னத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது கத்தோலிக்க கோட்பாடுகளும், புராட்டஸ்டென்ட் கோட்பாடுகளும், யாவுமே ஒன்று சேர்ந்ததாய் உள்ளது. ஆனால் வார்த்தையில் தரித்திருங்கள். 153 இப்பொழுது கவனியுங்கள். அவன் தரிசனத்தை கண்டபொழுது, அவன் போய் அவனிடத்தில் கூறினான். அவன், “போங்கள்” என்றான். அதற்கு அவன், “நீ உண்மையை என்னிடத்தில் சொல்ல வேண்டும் என்று நான் எத்தனை தரம் உன்னை ஆணையிடுவிக்க வேண்டும்” என்றான். 154 அதற்கு அவன், “இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல சிதறப்பட்டதைக் கண்டேன்” என்றான். 155 அவன், “நான் உம்மிடத்தில் சொன்னேனே, நான் உம்மிடத்தில் சொன்னேனே, அவனை நீர் இங்கே கொண்டு வருவதற்கு முன்னரே, அவன் என்ன கூறுவான் என்று எனக்குத் தெரியும்” என்றான். அது சரியே. அவனால் வேறொன்றும் சொல்ல முடியவில்லை. அவன் தேவனுடைய வார்த்தையை உடையவனாய் இருந்தால், அந்தக் காரியத்தை பழித்துரைப்பதைத் தவிர, அவனால் வேறேதும் செய்ய முடியவில்லை. 156 இன்றிரவு நான் வேதாகமத்தின் ஆதாரத்தில் இதைக் கூறுகிறேன். இந்த அர்த்தமற்றதை, உணர்ச்சிவசப்படுதலை, மதவெறியை, தேவனுடைய வார்த்தை அது ஒன்றுமேயில்லை, சபைதான் சரியாக இருக்கிறது என்று கூறும் காரியங்களையும், மற்றெல்லா தேவையற்ற காரியங்களையும் நான் கண்டனம் செய்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தின் பேரில் அதை கண்டனம் செய்கிறேன். வானங்களும், பூமியும் ஒழிந்து போகட்டும், ஆனால் தேவனுடைய வார்த்தை என்றென்றைக்கும் சத்தியமாகவே இருக்கும். அது உண்மை. இப்பொழுது, “நீங்கள் வேண்டுமானால் போங்கள்” என்றான். 157 என்ன சம்பவித்தது? இந்த மனிதன் அதிக உணர்ச்சி உடையவனாய், ஒரு மகத்தான தருணத்தை உடையவனாய், அவன் சுற்றி நடந்து வந்து, அவனுடைய கன்னத்தில் அறைந்து, தன்னுடைய கரத்தினால் அவனை அடித்தான். ஓ, “நீ ஒரு சிறு போலியான பரிசுத்த உருளை. என்னிடத்திலிருந்து தேவனுடைய ஆவி எங்கே சென்றது? அது எப்பொழுது உன்னிடத்திற்குச் சென்றது?” என்ற அவன் கூறுகிறதை என்னால் கேட்கமுடிகிறது. 158 அவன், “நான் என்ன கண்டேன் என்று உனக்குத் தெரியுமா?” என்றான். அவன், “நீங்கள் எல்லாரும் இங்கே உங்களுடைய மகத்தான நேரத்தில் இருந்தபொழுது, உங்களுடைய பெரிதான குழப்பத்தில் இங்கே இருந்தபோது, அங்கே பரலோகத்தில் ஏதோ காரியம், அதே நேரத்தில் நடந்து கொண்டிருந்தது” என்றான். 159 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கெட்ட குமாரர்களெல்லாரும் பன்றிகளின் பட்டியில் இருக்கின்றபொழுது, அமெரிக்காவானது அவர்களுடைய எல்விஸ் பிரஸ்லியோடும் (Elvis Presley) மற்றும் அவர்களுடைய “யார் சூசியை (Susy) நேசிக்கிறார்கள்?” என்ற நிகழ்ச்சியோடும் ராக் அண்ட் ரோல் மற்றும் பூகி—வூகி இசையிலே நடனமாடிக் கொண்டிருக்கையிலே, இப்பொழுது அங்கே பரலோகத்திலே ஒரு கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 160 அவன், “தேவன் ஜன்னல்களை திறந்து உள்ளே பார்க்கும்படி என்னை அனுமதித்தார். நீங்கள் உங்களுடைய ராக் அண்ட் ரோல் நேரத்தை உடையவர்களாய் இருந்தபொழுது, பரலோகத்தை நோக்கிப் பார்க்கும்படி தேவன் என்னை அனுமதித்தார். அங்கு உள்ளே நான் ஏதோ ஒன்றைக் கண்டேன்” என்றான். “நீ என்ன கண்டாய்?” என்றான். 161 அதற்கு அவன், “தேவன் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவர் வலது பக்கத்திலும் அவர் இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். அங்கே ஒரு பக்கத்தில் தூதர்களும், இன்னொரு பக்கத்தில் தூதர்களும் இருந்தனர்” என்றான். “நான் தூதர்களைப் பார்த்தபோது, ஒருவன் ஒரு பக்கத்திலும், மற்றொருவன் இன்னொரு பக்கத்திலும் உட்கார்ந்து கொண்டிருக்க, பரம சேனையே ஒன்று கூடியிருந்தது” என்றான். “தேவன், ‘நான் யாரை கீழே அனுப்புவேன்?’” ஓ, என்னே! கவனியுங்கள், “‘என்னுடைய தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டபடி, என்னுடைய வார்த்தையை நிறைவேற்ற ஆகாபை, நாம் அங்கு கொண்டு வரும்படியாய் நான் யாரை கீழே அனுப்ப முடியும்?’” என்றார் என்று கூறினான். 162 வார்த்தயோடு தரித்து இருங்கள். சகோதரனே, அவர்களுக்கு எத்தனை ராக் அண்ட் ரோல் விருந்துகள் இருந்தாலும், அதை எவ்வளவு தான் சபையிலே வாசித்தாலும், அதை எவ்வளவுதான் சபையிலே செயல்படுத்தினாலும் அவர்கள் எவ்வளவுதான் இது, அது அல்லது மற்றதைச் செய்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. வார்த்தையோடு தரித்து இருங்கள். அதுவே உண்மை. தேவன் தம்முடைய வார்த்தையை ஒவ்வொரு நேரத்திலும் காத்துக் கொள்கிறார். 163 கவனியுங்கள். ஆனால், “நாம் யாரை கீழே அனுப்புவோம்? ஆகாபை இங்கே கொண்டுவரும்படியாக, அங்கே நாம் யாரை கீழே அனுப்பலாம், ஏனென்றால் அது நிறைவேறியாக வேண்டுமே?” என்றார். 164 அவன், “ஒரு பொய்யின் ஆவி வந்ததை நான் கண்டேன். அது ‘என்னை அனுப்பும். நான் கீழே போய் அவர்களின் ஒவ்வொரு பேராயர்களுக்குள்ளும், அவர்களின் தீர்க்கதரிசிகளுக்குள்ளும் மற்றும் எல்லா மாநில மூப்பர்களுக்குள்ளும், மற்றும் அவர்களில் மீதமுள்ள அனைவருக்குள்ளும் செல்வேன். ஒரு பொய்யை தீர்க்கதரிசனமாய் உரைக்கும்படி நான் அவர்களை ஏவுவேன். அதனால் நான் அவர்களை அங்கே கொண்டு போக முடியும் என்றது’” என்றான். 165 இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள். அப்படியே இருங்கள். நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? ஆவியின் ஏவுதல், வேதத்தோடு ஒத்துப்போகாத ஏவுதல், தவறான ஏவுதலாக இருக்கிறது. 166 “சகோதரன் பிரான்ஹாம், நாம் சரியாக இருக்கிறோம் என்று நாம் எப்படி நிச்சயமாயிருக்க முடியும்? இது வந்து கொண்டிருக்கிறதை நாங்கள் காண்கிறோம். இது வந்து கொண்டிருக்கிறதையும், இந்த எல்லாக் காரியங்களையும், வினோதங்களையும் நாங்கள் காண்கிறோம்.” வார்த்தையோடு தரித்திருங்கள்! 167 நிச்சயமாக, அவர்கள் இருசாரருமே ஏவப்பட்டிருந்தனர். இங்கே ஒரு சிறிய நபர் அவன் அருகில் நின்று கொண்டிருந்தான். அவன் ஏவப்பட்டிருந்தான். இங்கேயோ நானூறு அருமையான பேராயர்கள் இருந்தனர். அவர்களும் ஏவப்பட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதையே சொல்லிக் கொண்டிருந்தனர். “ஆனால் எது சரியானதென்று நாம் எப்படி அறிந்து கொள்வோம்?” வார்த்தையோடு தரித்திருங்கள். 168 மிகாயா வார்த்தையை உடையவனாயிருந்தான். பொல்லாங்கானதை பொல்லாங்கினால் நடத்த வேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் அந்த மாய்மாலத்தையும், அந்த பாவனை விசுவாச மார்க்கத்தையும், அப்படிப்பட்ட காரியமான அது அதிக தரமானதை உடையதாய் இருந்ததையும், ஒரு வர்ணந்தீட்டப்பட்ட யேசபேலையும், மற்றும் எல்லாக் காரியங்களுமே, ஜீவிக்கின்ற தேவனுடைய கரத்தினால் இடைபட வேண்டியிருந்தது என்பதையும் அறிந்திருந்தான். ஏனென்றால் தீர்க்கதரிசி, தேவனுடைய வார்த்தை அந்தவிதமாக கூறியிருந்தது. நீங்கள், “தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையாக இருந்தானா?” என்கிறீர்கள். ஆம், ஐயா. 169 அவர்கள் அறிந்து கொள்வார்கள். “பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும், வகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசு மூலமாய் திருவுளம் பற்றினார்”. அது உண்மை. நிச்சயமாக அது தேவனுடைய வார்த்தையாயிருந்தது. 170 அங்கே அவர்கள் ஏவப்பட்டு, அவர்கள் சரியாக இருந்தனர் என்று எண்ணினர். அவர்கள் உத்தமமாய் இருந்தனர். அவர்கள் மகத்தான மனிதர்களாய் இருந்தனர். அவர்கள் படிப்பறியாத மனிதர்களாய் இருக்கவில்லை. அவர்கள் வெறுமனே ஓர் இரவிலே முடிவுறுகிற மனிதராய் இருக்கவில்லை. அவர்கள் வார்த்தையில் போதிக்கப்பட்டு, ஏவப்பட்டு மகத்தான மனிதர்களாய் இருந்தார்கள். ஆனால் அவர்களுடைய ஆவியின் ஏவுதல் வேதத்தினுடைய வார்த்தையோடு ஒத்துப்போகவில்லை. அந்தக் காரணத்தினால்தான் அவர்கள் தவறாக இருந்தனர் என்று மிகாயா அறிந்து கொண்டான். 171 வேதம், “கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராய் இருப்பார்கள்” என்று கூறியுள்ளது. 172 “ஏன்? நீர் அதை என்னிடம் விளக்கிக்கூற முற்படுகிறீரா? நான் ஒரு பேராயர். நான் இன்னின்னதற்கு தலைமையாயிருக்கிறேன். நான் கத்தோலிக்க சபையில் ஒரு மகத்தானவனாய் இருக்கிறேன். மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட் இல்லை பெந்தேகோஸ்தேயிலும் கூட நான் தான் மகத்தானவன், நான் மாநில மூப்பராக இருக்கிறேன். அந்த மனிதனை அனுமதிக்கும்படி என்னிடம் கூற நீங்கள் நினைக்கிறீர்கள்.” அது உண்மை. “நீங்கள் இதையும் அதையும் என்னிடம் கூற நினைக்கிறீர்களா?” 173 வேதம், “அவர்கள் தற்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரை பகைக்கிறவர்களாயும், அவர்கள் செய்தது போன்று தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை, வார்த்தையை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்” என்று கூறியுள்ளது. அவர்கள் அதன் பிரகாரமாய் பேசவில்லையென்றால், அங்கே அவர்களுக்கு வாழ்வே கிடையாது. அது உண்மை. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. ஏனென்றால் இப்படிப்பட்டவர்கள் வீடுவீடாய் அவர்களுடைய சிறிய புத்தகங்களோடும், கூட்டங்கள் முதலானவைகளோடும் நுழைந்து, பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளை வசப்படுத்திக்கொள்கிறார்கள். 174 அவர்கள் எந்தவிதமானவர்கள்? யந்நேயும், யம்பிரேயுமே; எல்லாவிதமான மூடத்தனங்களையும் மற்ற எல்லாக் காரியங்களையும் உடையவர்கள். யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல இவர்களும் சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் வார்த்தையைக் குறித்து விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாத மனிதர்கள். தேவனுடைய வார்த்தையை எடுத்து அதை வேறு ஏதோ ஒரு மூடத்தனத்திற்குள் அல்லது ஒரு மத சம்மந்தமான ஸ்தாபனமாக அல்லது அவர்களுக்கு ஒரு மகத்தான பெயரை ஏற்படுத்திக் கொள்ள அல்லது அவர்களுக்குத் தாமே ஒரு மகத்தான பெயரை உண்டாக்கிக் கொள்ள அதை தாறுமாறாக்க முயற்சித்தல். “அப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு”. வார்த்தையோடு தரித்திருங்கள். 175 என்ன சம்பவித்தது? அவன், “நான் இந்த பொய்யின் ஆவியைக் கண்டேன். மேலும் நான் கீழே போய் அவர்களை ஏவுவேன். நான் அவர்கள் ஒரு பொய்யை தீர்க்கதரிசனமாய் உரைக்கும்படி செய்வேன்” என்று கூறினது என்றான். அந்த மனிதர்கள் பொது ஜனங்களைப் பிரியப்படுத்த மிகவும் விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறார்களே! 176 ஓ, தேவனே, எங்களுக்கு உதவி செய்யும். “செவித்தினவுள்ள ஒரு போதகனாய் இருந்து, சத்தியலிருந்து கட்டுக்கதைகளுக்கு சாய்ந்து போவார்கள்” என்றும், பரிசுத்த ஆவியானவர் கடைசி நாட்களில் அவர்கள் எப்படியிருப்பார்கள் என்று நமக்கு கூறி எச்சரித்த விதமாகவே இதை ஏற்றுக் கொள்ள அவர்கள் மிகவும் விருப்பவமுள்ளவர்களாயிருக்கிறார்கள். தங்களையே பெயர் பெற்றவர்களாக்கிக்கொள்ள, வானொலியில் மகத்தானவர்களாயிருக்க, தொலைக்காட்சியில் மகத்தானவர்களாயிருக்க, அல்லது ஒரு மகத்தான பெயருடையவர்களாயிருக்க, அல்லது சபையில் ஒரு மகத்தான பங்குள்ளவர்களாயிருக்க, ஏதோ ஒரு மகத்தான காரியத்தைப் பெற, தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ள மிகவும் விருப்பமுள்ளவர்களாயிருக்கிறார்கள். அதைச் செய்ய அவ்வளவு விருப்பமுள்ளவர்களாய் இருக்கும் வரையிலும் அவர்கள் அதை வார்த்தையில் கவனிக்கத் தவறிப்போகிறார்கள். 177 ஆனால் மிகாயா வார்த்தையை கவனித்துக் கொண்டிருந்தான். அவன் சத்தியத்தை உடையவனாயிருந்தான். அவன் வார்த்தையை உடையவனாயிருந்தான். கவனியுங்கள், பின்னர், என்ன சம்பவிக்கும் என்பதை அவன் கூறினான். 178 இந்த நபரோ, நடந்து வந்து அவனுடைய முகத்தில் அடித்து, “தேவனுடைய ஆவி எந்த வழியாய் சென்றது?” என்றான். 179 “நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும்பொழுது நீ அதைக் காண்பாய்” என்றான். 180 அதற்கு ஆகாப், “இவனை சிறைச்சாலையிலே வையுங்கள். எப்படியாயினும் இந்த எல்லாக் கூட்டங்களையும், அனைத்தையுமே நிறுத்தி விடுங்கள். நமக்கு இனிமேல் இந்த பரிசுத்த உருளைகளின் நடவடிக்கைகள் இங்கே சுற்றிலுமாய் இருக்க வேண்டியதில்லை” என்றான். கவலைப்படாதீர்கள். அது வந்து கொண்டிருக்கிறது. “இவனை சிறைச்சாலையிலே வைத்து, இவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும், இடுக்கத்தின் தண்ணீரையும் கொடுங்கள். நான் சமாதானத்தோடே திரும்பி வரும்பொழுது, நான் அவனை கவனித்துக் கொள்வேன்.” வேறு வார்த்தைகளில் கூறினால், “அவனுடைய தலையை துண்டித்து விடுகிறேன்” என்பதாகும். 181 வயோதிப மிகாயா, தேவனுடைய வார்த்தையில் நின்றவனாய், தன்னுடைய தரிசனத்தை அறிந்தவனாயிருந்தான். ஓ தேவனே! அவனுடைய தரிசனம் தேவனுடைய வார்த்தையோடு சரியாய் இருப்பதினால், அது தவறிப்போக முடியாது என்பதை அறிந்தவனாய் இருந்தான். அவன், “நீர் சமாதானத்தோடே திரும்பி வருகிறது உண்டானால், தேவன் என்னைக் கொண்டு பேசினதில்லை” என்று சொன்னான். ஆமென். ஆமென்! 182 ஓ ஜனங்களே! வேளை கடந்ததாயிருக்கிறது. ஆனால் என்னுடைய அருமையான நண்பனே, நான் இதை உன்னிடத்தில் கூற விரும்புகிறேன். இது தேவனுடைய வார்த்தையுமல்ல, சத்தியமுமல்ல என்று உங்களுக்குக் கூறுகின்ற ஒரு அமைப்பின் திட்டத்திற்கு நீங்கள் (ஒருபோதும்) செவி கொடுக்காதீர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் முன்னறிவிக்கப்படாமல், புதிதாக கொண்டு வரப்படுகிற எந்த மூடத்தனத்திற்கும் நீங்கள் ஒருபோதும் செவி கொடுக்காதீர்கள் ஏனென்றால், அவர், அவர்தாமே வந்து, வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்தினபோது வார்த்தையை நிறைவேற்றும்படிக்கு மட்டுமே அவர் அதைச் செய்தார். வார்த்தையை நிறைவேற்ற மட்டுமே! 183 அவர் சபைகளின் எல்லா மாதிரிகளுக்காகவும், இரண்டையும் முன்னறிவித்திருக்கிறார். வெளிப்படுத்தல் 17-ல் “நான் ஒரு ஸ்திரீயை, ஒரு மகாவேசியை, ஏழு தலைகளையுடைய சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஏறியிருக்கக் கண்டேன்” என்று கூறப்பட்டிருக்கிறது. வாடிகன் ஏழு மலைகளின் மேல் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்புதான் அங்கிருந்து வந்தேன். “அவள் வேசிகளுக்குத் தாய்” என்றும் அவளிடத்திலிருந்து பிறந்த குமாரத்திகள் என்றும் கூறப்பட்டுள்ளது. கெட்ட ஸ்திரீ ஒரு நல்ல குமாரத்தியை பிறப்பிக்க முடியும். ஆனால் கவனியுங்கள். ஒரு வேசி என்றால் என்ன? ஒரு விபச்சாரி. இந்த துர்க்கீர்த்தியுள்ள ஸ்திரீகள் என்றால் என்ன? விபச்சாரம் செய்கிற ஸ்திரீகள், தங்களுடைய கணவன்மார்களாயிராத ஆண்களோடு ஜீவிக்கிறவர்கள். 184 இந்த ஜனங்களும், இந்த சபைகளும் தேவனுடைய ஊழியக்காரர்களென்றும், தேவனுடைய சபையென்னும் உரிமை கோரிக்கொண்டு, சகிக்க முடியாத உலகத்தின் காரியங்களைச் செய்கிறார்கள். அவர்கள் ஆவிக்குரிய விபச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சபையார் வர்ணம் தீட்டிக்கொள்ள அனுமதிக்கிறார்கள். அவர்கள்…ஸ்திரீகள் அரைக்கால் சட்டைகளை அணிகின்றனர். அவர்கள் வெளியே சென்று உலகத்தாரைப் போன்று உடுத்திக் கொள்ள அனுமதிக்கிறார்கள். அதை ஒருபோதும் கண்டனம் செய்வதேயில்லை. அவர்கள் புருஷர்கள் நட்புக்காக ஒரு சிகரெட்டை புகைக்க அல்லது மதுபானம் அருந்த அனுமதிக்கிறார்கள். அவர்கள் அடித்தளத்தில் தங்களுடைய சிறு சீட்டாட்ட விருந்துகளையும், கூட்டு சூதாட்ட பந்தயங்களையும் அனுமதித்து, சபையில் கேட்போர் அமர்ந்திராமல் உலவிக்கொண்டே கேட்கும் வாய்ப்புடைய இசை விருந்து அமைப்புகளையும் நடனங்களையும், இரவு விருந்துகளையும், மற்ற எல்லாக் காரியங்களையும் அனுமதித்து, ஜீவிக்கின்ற தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஒரு சிறிய அற்பமான வேத சாஸ்திரத்தை போதிக்கின்றனர். அது உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். அது அற்பமானதாயும், பால்யமானதாயும், பெண் தன்மை கொண்டதாயும் உள்ளது. அது என்னவென்பதை நான் அறியேன், ஆனால் அது பிசாசினுடையதாய் உள்ளதே! நான் கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய வார்த்தையை முன்னிட்டு அதை கண்டனம் செய்து, நாம் ஒரு மறுஜென்மம் அடைந்தவர்களாய், பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டவர்களாய், மறுபடியும் பிறந்தவர்களாய், தாழ்மையிலும், தேவனுடைய சமூகத்திலும் நடந்துகொண்டு, வருகின்ற நாட்களில் எப்பொழுதும் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாயிருக்க வேண்டும் என்று கூறுகிறேன். ஜனங்களே, நீங்கள் இந்தக் காரியங்களிலிருந்து விலகி, தேவனிடத்தில் உங்களுடைய முழங்காலில் இருங்கள். தேவனுடைய ஆசீர்வாதங்களின் விளிம்பை முத்தமிட்டிருக்கிறோம் என்று உரிமை கோருகின்ற தேவ சபையே, உங்களைத்தான், தேவனுடைய வார்த்தையோடு தரித்திருங்கள். அதற்கு ஏதாவது காரியம் முரணாயிருக்குமானால், அதினின்று வெளியேறி தொடர்ந்து போய்க் கொண்டேயிருங்கள். சாயங்கால வெளிச்சங்கள் இங்கே இருக்கின்றன. கர்த்தராகிய இயேசு சீக்கிரமாய் வருகிறார். அப்படியே ஒரு வினாடி நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 185 ஓ, அந்த மகத்தான நாள், அந்த நாளின் நாள், அந்த புத்தகங்களின் புத்தகம். “புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, அந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின்படியே ஒவ்வொரு மனிதனும் நியாயந்தீர்க்கப்பட்டான்.” 186 என்னுடைய பாவமான, ஏமாற்றப்பட்ட நண்பனே, எல்லாரும் அல்ல…ஆம், என் நண்பனே, நீ வீணாய் முயற்சித்து, ஆகாயத்தில் சிலம்பம்பண்ணுகிறாய். வெளிச்சத்தை அணைக்க ஒரு ஜன்னலின் எதிரே தன்னுடைய தலையை மோதிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்ததை நான் கவனித்த ஒரு பறவையைப் போன்றே இருக்கிறாய். அது என்ன செய்தது? அது தன் சொந்த மூளையை மட்டுமே சிதறடித்தது. வெளிச்சமோ தொடர்ந்து பிரகாசித்தது. 187 ஒருநாள், அங்கே உயரே விடுதலையின் சிலையில் அதன் பெரிய கரத்தில் சிறு பறவைகள் சுற்றிலுமாய் மரித்துக் கிடந்தன. நான், “என்ன சம்பவித்தது?” என்றேன். 188 அதற்கு அந்த மனிதன், “நேற்றிரவு புயல் இருந்தது. இந்தப் புயலில் இந்த சிறு பறவைகள் வெளிச்சத்தில் பறந்தன. பாதுகாப்பாய் செல்வதற்கு அந்த வெளிச்சத்தை பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவைகள் அவைகளினுடைய சிறிய சிறகுகளை அடித்து, அந்த விளக்கை அணைக்க முயற்சித்தன. அவைகள் தங்களுடைய மூளைகளையே சிதறடித்தன” என்றான். 189 தேவனுடைய வார்த்தை கூறாதே ஏதோ ஒன்றை கூறும்படி செய்வதற்காக உங்களுடைய மூளைகளை சிதறடிக்க முயற்சியாதேயுங்கள். முயற்சியாதேயுங்கள். இந்த நாளின் சமுதாயங்களோடு இசைந்து போக முயற்சியாதேயுங்கள், ஏனென்றால், “நீங்கள் உலகத்திலும் அல்லது உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூர்ந்தால், தேவனுடைய அன்பு உங்களிடத்தில் இல்லை.” 190 ஏன் சுவிசேஷ வெளிச்சத்தை எடுத்துக்கொண்டு இன்றிரவே பாதுகாப்பாக பறந்து செல்லக்கூடாது? “ஓ, எங்களை பாதுகாத்துக் கொள்ளும் தேவனே.” 191 பரலோகப் பிதாவே! நித்தியத்திற்கு கட்டப்பட்ட ஜனங்களாய், பதினாறு வித்தியாசமான மூலக்கூறுகளோடும், இந்த உலகத்தின் இயலுலக ஒளி மற்றும் பெட்ரோலியங்களால் நாங்கள் உண்டாக்கப்பட்ட பையன்களாயும், பெண்களாயும், ஆண்களும் பெண்களுமாய் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களுடைய சரீரத்தில் விலையேறப்பெற்றதான ஒரு ஆத்துமா உள்ளது. அதுவே துவக்கமாய், ஆரம்பமாயும் இருக்கிறது. 192 கர்த்தாவே, எங்களுடைய அசைவை எங்களுக்குக் கொடுக்கிற அந்த இருதயத்தோடும், அந்த ஆத்துமாவோடும், என்றென்றைக்கும் ஜீவிக்கிறதுமான அந்த மென்மையான இடத்தோடும், இப்பொழுதே தொடர்பு கொள்ளும்படியாய் நாங்கள் உம்மிடம் ஜெபிக்கிறோம். ஒவ்வொரு இழக்கப்பட்ட பாவியையும் இன்றிரவு நீர் இரட்சியும் என்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் கடந்து போய்க் கொண்டிருக்கும் இந்த மகத்தான மைல் கம்பங்களும், வீதியின் இரண்டு பக்கங்களிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் இந்த அடையாளங்களும், சீக்கிரமாய் பிரசன்னமாகப் போகும் நீதியான ஒருவராகிய கர்த்தராகிய இயேசுவையே சுட்டிக்காட்டுகிறது என்பதை அவர்கள் உணருவார்களாக. அவர் சிநேகிதனாய் இருக்க, ஜீவனாயிருக்க அறிவதே நித்திய ஜீவனாய் இருக்கிறது. வேதத்தின்படியாய் மட்டுமே நாங்கள் அவரை அறிந்து கொள்ள முடியும். எங்களுடைய சபையின் மூலமாயல்ல. ஆனால் பிறப்பினால், புதிய பிறப்பினால் மறுபடியும் பிறந்ததினால் அறிந்து கொள்ள முடியும். 193 பிதாவே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்ட அல்லது நரகத்திற்குப் போக விரும்புகிற, அழிவுள்ள நபர் ஒருவரும் இங்கு என்னோடு இல்லை என்று என்னுடைய முழு இருதயத்தோடு நான் விசுவாசிக்கிறேன். ஏதோ காரியம் எங்களுடைய வழியில் நிற்க, நாங்கள் ஏன் அனுமதிக்க விரும்புகிறோம்? ஆகாயம் முழுவதுமாய் உண்மையானவைகளால் நிறைந்திருக்கும்பொழுது நாங்கள் ஏன் ஒரு போலியானதை ஏற்றுக் கொள்ள விரும்புகிறோம்? 194 பூமியானது அதன் மகத்தான பாபிலோனிய திராட்சரச விருந்திலும், திராட்சரசத்தைக் குடித்துக் கொண்டும், வெறித்துக் கொண்டும், நேபுகாத்நேச்சாருக்கு இருந்த மறுமனையாட்டிகளைப் போன்று அரையாடைகளை அணிந்த ஸ்திரீகளோடும் இருக்கையில் அங்கே சுவற்றின் மேல் ஒரு கையெழுத்து அசைந்து கொண்டிருக்கிறது. ஞானதிருஷ்டிக்காரர்கள் அது வருகிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சாதாரண நபரைக் காட்டிலும் மேலானவர்கள். அது வார்த்தையில் எழுதப்பட்டிருக்கிற காரணத்தால் நாங்கள் அதைக் காண்கிறோம். இனி ஜலத்தினால் அல்ல, ஆனால் இந்த முறை அக்கினியினாலே. நாங்கள் சுவற்றின் மேல் கையெழுத்தை காண்கிறோம். ஒவ்வொரு தேசமும் ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் காண்கிறோம். 195 தேவன் மறுபடியும் பிறந்ததான தம்முடைய சபையை எடுத்துக் கொள்ளப்போகிறார். வேளையானது வந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது அந்த நாட்களில், லூத்தரன் காலத்தில், மெத்தோடிஸ்ட் காலத்தில், அப்படியே காலங்களினூடாக இருந்து, உண்மையான இருதயங்களோடு தேவனுக்குள் நித்திரையாயிருக்கிறவர்கள், தானிய மணியானது ஒரு சிறு இலையாய் மாத்திரமே இருந்தபோது, அது ஒரு பட்டுக்குஞ்சமாய் இருந்தபோது, ஆனால் அது அனைத்துமாய் ஒன்று சேர்ந்து, அந்த ஜீவனானது ஒன்றாக சேர்க்கப்படும்போதே உயிர்த்தெழுதல் உண்டாகும். அவர்களெல்லாருமாய் கர்த்தராகிய இயேசுவின் மகத்தான அழகான சரீரமாய் உருவாக்கப்படுவது சமீபமாய் இருக்கிறது. 196 நீர், “அதை புறக்கணிக்கிறவர்கள் புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும், புலம்பலும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்று கூறினீர். பிதாவே, தேவனே, ஒரு நபர் கூட அங்கே இருக்க விரும்ப மாட்டார்கள். 197 ஓ, தேவனே எங்கள் மேல் இரக்கமாயிரும். செய்த பாவங்களுக்காக வருந்துகின்ற எங்களுடைய இருதயங்களோடு, எங்களுடைய தலைகள் மண்ணை நோக்கியவாறு இருக்கிறது. அங்கிருந்துதான் நீர் எங்களை எடுத்தீர், நீர் சற்று தாமதிப்பீரானால், நாங்கள் அங்கே திரும்பிப் போய்விடுவோம். நான் காத்துக் கொண்டிருக்கும் இந்த ஜனங்களுக்காக வேண்டுகையில், தேவனே எங்கள் மேல் இரக்கமாயிரும். இன்றிரவு இந்தச் செய்திக்குப் பின்னர், உம்முடைய சமூகத்தில் இந்த ஜனங்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வுக்குள்ளாய் நீர் இவர்களை எழுப்பும் என்று நான் ஜெபிக்கிறேன். 198 நம்முடைய தலைகளை நாம் வணங்கியவாறு இருக்கையில் இங்கே யாராவது ஒரு நபர்…இன்னும் சரியாக கூறினால் (உங்களில் அநேகர் ஆயத்தப்படவேண்டியவர்களாய் இருக்கிறீர்கள்) உங்களுடைய ஜீவியம் தேவனுடைய வார்த்தையோடு ஒத்து இல்லை என்று உணருகிறவர்கள் எத்தனைபேர் அங்கேயிருக்கிறீர்கள்? நீங்கள் தயக்கமடைந்திருக்கிறீர்கள். நீங்கள் அரை வழியாய் விசுவாசித்திருக்கிறீர்கள். நீங்கள் சிறிது உலகத்தையும், சிறிது இதையும், சிறிது அதையும் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்றிரவு, அதைக் குறித்து நீங்கள் சுகவீனமாயும், களைப்பாயும் இருக்கிறீர்கள். ஓ, நீங்கள் சபையில் சேர்ந்து கொண்டீர்கள். அது உண்மைதான். ஒருக்கால் நீங்கள் சேராதிருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் தேவனுக்கு முன்பாக, ஒருவேளை நாம் காலைக்கு முன்பாகவே அவருடைய சமூகத்தில் நிற்கலாம். ஒருவேளை அங்கே ஒரு ஏவுகணை காலைப்பொழுது விடிவதற்கு முன்பாக இந்த முழு காரியத்தையும் வளித்தாக்குதலில் அழித்துப் போடலாம். இப்பொழுது ரஷ்யாவில் பகல்வெளிச்சம் என்பது நினைவிருக்கட்டும். 199 அவர், “இரண்டு பேர் படுக்கையில் இருப்பார்கள்”, அப்பொழுது அவர் வரும்பொழுது எங்கோ இரவு நேரமாக இருக்க வேண்டும். “ஒருவன் எடுத்துக் கொள்ளப்படுவான், இன்னொருவன் கைவிடப்படுவான்” என்றார். 200 நீங்கள் தேவனுடைய ஆவியினால் மறுபடியுமாய் பிறந்து, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, விசுவாசம், சாந்தம், பொறுமை இவைகளோடு ஆவியின் கனிகள் உங்களுடைய ஜீவியத்தைத் தொடர, தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் உங்களுடைய இருதயத்தில், நீங்கள் திருப்தியடைந்திருக்கிறீர்களா? அது உங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறதா? 201 அப்படி இல்லையென்றால், நீங்கள் அவ்வளவு உணர்ச்சியுள்ளவர்களாய் இருப்பீர்களா? நான் அதை அந்தவிதமாக சொல்லலாம். தேவனுக்கு நேராக உங்களுடைய கரத்தை உயர்த்தி, நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள் என்று நீங்கள் ஒப்புக்கொண்டு, “தேவனே, என்னிடத்தில் கிருபையாய் இரும், நான் எந்தவிதமான கிறிஸ்தவனாய் ஜீவிக்க வேண்டுமென்று நீர் வாஞ்சிக்கிறீரோ, அந்த விதமாக நான் ஜீவிக்க எனக்கு உதவி செய்யும். எனக்கு பரிசுத்த ஆவியை அருளி, நான் தெய்வபக்தியுள்ள ஒரு ஜீவியம் ஜீவிக்கும்படி செய்வீரா?” என்று கூறுங்கள். உங்களுடைய கரத்தை தேவனுக்கென்று நீங்கள் உயர்த்துவீர்களா? தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. அநேகமனேக கரங்கள் உயர்ந்திருக்கின்றன. 202 அந்த நேரத்தில் கரத்தை உயர்த்தாமல், இப்பொழுது உங்களுடைய கரத்தை உயர்த்த விரும்புகின்ற வேறு யாராவது இருக்கிறீர்களா? உங்களுடைய கரத்தை நீங்கள் உயர்த்துவீர்களா? ஸ்திரீகளே…தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. புருஷர்களே, ஸ்திரீகளே நீங்கள் உண்மையாகவே…சீமாட்டியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சிறு பையனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 203 இதன் ஆபத்தான நிலையை நீங்கள் உணர்ந்தீர்களா? நான் கூறுவதென்னவெனில் வெறுமனே ஒரு செய்தியை கேட்க அல்லது ஒரு செய்தியாளனை பார்க்கும்படியாக நீங்கள் சபைக்கு வருகிறதில்லை. நீங்கள் செய்தியை கேட்க வருகிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு அதை உங்களுக்கு அளிப்பதே செய்தியாயிருக்கிறது. 204 இப்பொழுது அதைக் குறித்தென்ன? ஒருக்கால் காலை என்பது அதிக காலம் கடந்ததாக இருக்கலாம். இன்னும் உங்களுடைய கரத்தை உயர்த்தாதவர்கள், “தேவனே என்னிடம் இரக்கமாயிரும், உம்முடைய ஆவி என்னிலிருக்க நான் விரும்புகிறேன்” என்று கூறி தேவனுடைய சமூகத்தில் உங்கள் கரங்களை உயர்த்த நீங்கள் சித்தமாயிருக்கிறீர்களா? ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை அசீர்வதிப்பாராக. அங்கே பின்னாக உள்ள உம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை, உம்மை, உம்மை ஆசீர்வதிப்பாராக. ஆம் ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 205 நீங்கள், “தேவனே நான் குயவனுடைய வீட்டிற்குச் செல்கிறேன். நான் வியாதியாயும், களைத்துப்போயுமிருக்கிறேன். நான் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட ஜீவியத்தையே எப்பொழுதும் விரும்பியிருக்கிறேன். இன்றிரவு, என்னுடைய இருதயத்தை கீழே கிடத்தி, ‘தேவனே அதையெல்லாம் உடைத்து, எனக்கு ஒரு புதிய இருதயத்தை, ஒரு புதிய ஆவியை கொடுத்து, சரியாக அதன் மத்தியில் உம்முடைய ஆவியை வையும்’ என்று கூற நான் குயவனுடைய வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறேன். என்னுடைய ஜீவியம் உம்முடைய வார்த்தையின்படியாய் தொடர்ந்து ஓடும்படி செய்வீராக. கர்த்தர் உரைக்கிறதாவது, என்பதன் மேல் நான் நிற்கும்படியாக என்னை இந்த நாளின் ஒரு மிகாயாவாக ஆக்கும். நான் உமக்கு முன்பாக ஜீவிக்கிறதும், என் தரிசனமும், என் ஜீவியமும் நானல்ல, ஆனால் எனக்குள்ளிருக்கும் ஆவி, வேதம் வேண்டுகிற அந்த ஜீவியத்தில் என்னை ஜீவிக்கச் செய்கிறது. அந்தவிதமாய்த்தான் நான் இருக்க விரும்புகிறேன். ஓ, தேவனே, உம்முடைய இரக்கத்தால் என்னை அந்த விதமாக ஆக்குவீரா?” என்ற கூற சித்தமாயிருக்கிறீர்களா? 206 உங்களுடைய கரத்தை உயர்த்தாதிருக்கிற யாராவது இப்பொழுது நீங்கள் உயர்த்துவீர்களா? சீமாட்டியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கையில் அப்படியே மிகவும் அமைதியாக அமர்ந்திருங்கள். ஒவ்வொரு தலையும் வணங்கி இருக்க, ஒவ்வொரு கண்ணும் மூடப்பட்டிருக்க, ஒவ்வொருவரும் ஜெபித்துக் கொண்டிருங்கள். அப்படியே மிருதுவாக, இனிமையாக அதை இப்பொழுது ஏற்றுக் கொள்ளுங்கள். …விரைவான மாற்றங்களைக் கொண்டது. பூமி பயனற்றுப் போகும், அசையாதவையே நிலைநிற்கும், நித்தியமான காரியங்களின் மேல் உங்கள் நம்பிக்கைகளைக் கட்டுவீர், தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்வீர்! தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்வீர்! தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்வீர்! நித்தியமான காரியங்களின் மேல் உங்கள் நம்பிக்கைகளைக் கட்டுவீர், தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்வீர்! இப்பொழுது தேவனோடு உள்ளே அடைத்துக் கொள்ளுங்கள் நம்முடைய யாத்திரை முடிவடையும்போது (ஓ!) நீங்கள் தேவனிடத்தில் உண்மையாய் இருந்திருந்தால், அழகும், பிரகாசமுமாய் மகிமையில் உள்ள உங்கள் இல்லத்தை, ஆனந்த பரவசமாக்கப்பட்ட உங்கள் ஆத்துமா அதைக் காணுமே! இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! (அது அவருடைய வார்த்தையில் இருக்கிறது) தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! நித்தியமான காரியங்களின் மேல் உள்ள நம்பிக்கைகளைக் கட்டுங்கள், தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! 207 [சகோதரன் பிரான்ஹாம் தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள் என்ற பாடலை தாழ்ந்த குரலில் வாய் திறவாமல் பாடுகிறார்.—ஆசி.] அவர் உங்கள் அருகில் அங்கே இருக்கிறார். 208 இப்பொழுது கூட்டத்தாரினூடாக நான் அங்கே பின்னாக ஒரு அருமையான சிறிய மனிதனை பார்த்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச காலத்திற்கு முன்னர், அன்றொரு நாள் அவருடைய இனிய இருதயத்திடம் விடைபெற்று வந்திருக்கிறார். இன்னொருவர் இங்கே எங்கேயோ உட்கார்ந்திருக்கிறார். அவருங்கூட சில காலத்திற்கு முன்னர் தன்னுடைய இனிய இருதயத்திடம் விடைபெற்று வந்திருக்கிறார். அவர்கள் வெளியே போகையில், அவர்கள் தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய அன்பார்ந்த புருஷன்மார்கள், இனிய இருதயங்களை மீண்டும் சந்திப்போம் என்பதை அறிய இன்றிரவு இங்கே தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கு இல்லையென்றால், ஓ, அது என்னவாய் இருக்கும்? ஓ, நித்தியமான காரியங்களின் மேல் உங்கள் நம்பிக்கையை கட்டுங்கள். தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! 209 எங்களுடைய பரலோகப் பிதாவே, இன்னிசை இனிமையாக இசைக்க, இது ஒரு செய்தியாயிருக்கிறது. ஒரு பிரசங்கியார், பரிசுத்த ஆவியானவர், இப்பொழுது இன்னிசையின் மூலமாக எங்களுக்குப் பிரசங்கித்து, இந்த செய்தியோடு இன்றிரவு என்ன செய்ய வேண்டுமென்றால், “வெறுமனே தேவனுடைய மாறாத வார்த்தையைப் பற்றிக் கொண்டிருங்கள். வானங்களும் பூமியும் ஒழிந்துபோம், மாறிப்போம், ஆனால் என் வார்த்தையையோ ஒருபோதும் ஒழிந்து போகாது” என்பதை எங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அது மாறவே முடியாது. அது மாறாத தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. 210 “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” என்று சங்கீதக்காரன் கூறினான். 211 பிதாவே, அங்கே இருபது அல்லது முப்பது கரங்கள் இன்றிரவு உயர்த்தப்பட்டிருக்கின்றன. புருஷர்களும், ஸ்திரீகளும் வார்த்தையை கேட்டிருக்கின்றனர். “விசுவாசம் கேள்வியானால் வரும்.” உம்முடைய ஒத்தாசையினாலும், உம்முடைய கிருபையினாலும், இந்த மணிவேளை முதற்கொண்டு உம்மை சேவிப்பார்கள் என்று அவர்கள் எல்லாவற்றிற்கும் போதுமானதான இந்த ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறார்கள். 212 இப்பொழுதும் பிதாவே, நீர் இனிமையாய் அவர்களுடைய இருதயங்களுக்குள் செல்லமாட்டீரா? அவர்களுடைய புதிய ஆவியிலே உம்முடைய ஆவியை வையும். நீர் அவர்களுக்கு ஒரு புதிய ஆவியை கொடுத்திருக்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் ஒருபோதும் அவர்களுடைய கரத்தை உயர்த்தியிருக்கமாட்டார்கள். அவர்கள் அதை வாஞ்சித்து இருக்கவேமாட்டார்கள். ஆனால் அவர்கள் குயவனுடைய வீட்டிற்குச் சென்று, அவர்களுடைய உள்ளுணர்வுகளையும், அவர்களுடைய நோக்கங்களையும் நீர் மாற்றும்படியாய் அவர்கள் அனுமதித்தார்கள். இப்பொழுது அவர்களுடைய இருதயத்தில் அவர்கள் மிருதுவாயிருக்கிறார்கள். 213 நீர் “என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்றீர். வாலிபத்திலிருந்து வயதானவர்கள் மட்டுமாக அதைச் செய்யும்படி நீர் அவர்களுக்கு கூறியிருந்தாலொழிய அவர்களால் அவர்களுடைய கரங்களை உயர்த்தியிருக்க முடியாது. அவர்கள் அதைச் செய்தார்கள், ஏனென்றால் நீர் அவர்களிடத்தில் பேசினீர். தேவன் அவர்களை ஒரு அன்பின் வெகுமதியாக கிறிஸ்துவுக்கு கொடுக்கிறதாக அது இருக்கிறது. அவர்கள் தங்களுடைய இருதயங்களை ஒப்புக் கொடுத்தார்கள். 214 “என் வசனத்தைக் கேட்டு” என்று உம்முடைய மகத்தான சத்தம் கூறுகிறதை எங்களால் கேட்க முடிகிறது. உம்முடைய சபையையல்ல, உம்முடைய சபை வார்த்தையை உடையதாய் இருக்கிறது. அது உம்முடைய வார்த்தைக்கு முரணாயில்லை. “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” 215 பிதாவே, அவர்களை தீர்க்காயுசோடும், நித்திய ஜீவனோடும் ஆசீர்வதியும். நீர் வாக்களித்திருக்கிறபடியே கடைசி நாளில் அவர்களை எழுப்பும். இது ஒரு மகத்தான பிரதிஷ்டை ஆராதனையாக இருப்பதாக. ஜீவிக்கின்ற தேவனுடைய பரிசுத்தவான்கள் களிகூர்ந்து புதுப்பிக்கப்படுவார்களாக. 216 வியாதியஸ்தர் ஒவ்வொருவரையும், இங்கே யாராவது இருப்பார்களாயின், அவர்கள் சுகமடைவார்களாக. எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக உம்முடைய ஆவி வெளிப்படுத்தப்படுவதாக. 217 இப்பொழுது அப்படியே ஒரு வினாடி நம்முடைய தலைகள் வணங்கி இருப்பதாக. நான் எதிர்பார்ப்பதென்னவென்றால், உங்களுடைய கரத்தை உயர்த்தின உங்களைத்தான், நீங்கள் என்ன கூறினீர்களோ, அதை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நீங்கள் உத்தமமாய் இருக்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் உங்களை சத்தியமாயிருக்கிற தேவனுடைய வார்த்தைக்கு கொண்டு செல்லுகிறேன். 218 இப்பொழுது ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது. எங்கே நீங்கள் அதை நினைத்தீர்களா? நீங்கள் அப்படிச் செய்திருந்தால், அது தேவன் உங்களுடைய இருதயத்திலே தட்டினதாய் அது இருந்திருக்கும். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டினார்.—ஆசி.] அது சரி. இப்பொழுது நீங்கள் உண்மையாகவே அப்படி எண்ணுவீர்களானால், அப்பொழுது பழைய காரியங்களெல்லாம் கடந்து போய்விட்டன. தேவன் அவ்வண்ணமாய் கூறினார். அது மாறமுடியாது. 219 இயேசு, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்றார். 220 அது உண்மையாகவே உங்களுடைய இருதயத்தில் சம்பவித்திருந்தால், நீங்கள் தேவனிடத்தில் போதுமான நன்றியுள்ள உணர்வுள்ளவர்களாயிருக்க, இங்கே அவருடைய பீடமட்டுமாய் நடந்து வந்து முழங்காற்படியிட்டு, அவர் உங்களுக்காக செய்திருக்கிறதற்காக அவருக்கு நன்றி கூறுவீர்கள் என்று நான் நினைக்கிறேன். 221 சகோதரி அதே பாடலை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கையில், தங்கள் கரத்தை உயர்த்தின ஒவ்வொருவரும், உயர்த்தாத அனைவரும், அவர்கள் வரவேண்டும் என்று விரும்பினால் முன்னே வரும்படி நான் விரும்புகிறேன். நாம் முழங்காற்படியிட்டு, அவர் நமக்காக செய்திருக்கிறவைகளுக்காக சர்வ வல்லமையுள்ளவருக்கு ஒரு நன்றியான வார்த்தையை கொடுப்போமாக. நீங்கள் உத்தமமாய் இருந்தீர்கள் என்பதை அது நிரூபிக்கிறது. நித்தியமான காரியங்களின் மேல் உங்கள் நம்பிக்கைகளைக் கட்டுங்கள், தேவனுடைய மாறாத கரத்தை பற்றிக் கொள்ளுங்கள்! நம்முடைய யாத்திரை முடிவடைகின்றபொழுது, நீங்கள் தேவனுக்கு உண்மையாய் இருந்திருந்தால், அழகும், பிரகாசமுமாய் மகிமையில் உள்ள உங்கள் இல்லத்தை, ஆனந்த பரவசமாக்கப்பட்ட உங்கள் ஆத்துமா காணுமே! தேவனுடைய மாறாத கரத்தை பற்றிக் கொள்ளுங்கள்! தேவனுடைய மாறாத கரத்தை பற்றிக் கொள்ளுங்கள்! நித்தியமான காரியங்களின் மேல் உங்கள் நம்பிக்கைகளைக் கட்டுங்கள், தேவனுடைய மாறாத கரத்தை பற்றிக் கொள்ளுங்கள்! நான் தொடர்ந்து செல்கிறேன். இப்பொழுது நான் வியப்படைகிறேன்… 222 இன்றிரவு இங்கே நமக்கு அநேக போதகர்களும், சுவிசேஷகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தில் ஆத்துமாக்களைக் காண வாஞ்சிக்கிறார்கள். சகோதரர்களே நான் வியக்கின்றேன். நீங்கள்…இங்கே வாரும், போதகரே, சகோதரர்கள் இங்கே தங்களுடைய ஸ்தானத்தை சரியாக எடுத்துக் கொள்வார்களா என நான் எதிர்பார்க்கிறேன். நாங்கள் இந்த அருமையான ஜனங்களுக்காக ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறோம். 223 உங்களுக்கு என்ன என்று தெரியுமா? வார்த்தையின்படியாக நான் அதற்கு ஒரு பரிசோதனை முயற்சியை கொடுக்கிறேன். இந்த இரவு, தேவனுடைய நித்தியமான வார்த்தையை அவர்கள் ஏற்றுக் கொண்டு விசுவாசிப்பார்கள் என்றே தங்களுடைய கரங்களை அவர்கள் உயர்த்தினார்கள். நான், “இப்பொழுது நாங்கள் ஜெபித்தோம்” என்றேன். 224 இப்பொழுது இயேசு என்ன கூறினார் என்பதைப் பாருங்கள். இப்பொழுது நாம் அதை வார்த்தைக்கு கொண்டு செல்வோம். நாம் நிறைய மூடத்தனமானவைகளை உடையவர்களாயிருக்கிறோம். ஆனால் நாம் அதை வார்த்தைக்கு கொண்டு செல்வோம். இயேசு, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்றார். தேவன் அவ்வண்ணமாய் கூறினார். அது அதை என்றென்றைக்குமாய் தீர்க்கிறது. “எந்த மனிதனுமே”, “என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்கு கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்”. ஒருவரும் இழக்கப்படவில்லை. “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவனை கடைசிநாளில் எழுப்புவேன்” என்று இயேசு கூறினார். 225 ஒரு ஆத்துமா பத்தாயிரம் உலகங்களுக்கு பெறுமானமுள்ளதாய் இருக்கும்பொழுது, இந்த பீடத்தின் மேல் நோக்கிப் பார்க்க, ஓ, எவ்வளவு அதிசயமாயிருக்கிறது. அவர்கள் ஒரு சபையை சேர்ந்துகொள்ள ஒருபோதும் வரவில்லை. அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு அங்கமாய் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் வருகிறார்கள். இங்கே அவர்கள் நன்றி கூறுதலையும், ஜெபத்தையும் ஏறெடுக்கவே வருகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் மேலும் கீழுமாக இந்த பீடத்தில் இறங்கி, ஒவ்வொரு இருதயத்தையும், இன்றிரவு ஒரு சமாதானமுள்ள, இனிமையான, தாழ்மையான ஆவியினால் அபிஷேகித்து, நிரப்பி, அது கனிகளையும், கிறிஸ்துவின் நீதியையும், அவர்களுடைய சரீரத்தில் சுவாசம் இருக்குமட்டும் கொண்டு வரும்படியாயும், மகிமையில் வீட்டிற்கு போகச் செய்யும்படியாயும் நான் ஜெபிக்கிறேன். 226 நாங்கள் ஜெபத்தை ஏறெடுக்கையில் நீங்கள் விருப்பங்கொண்டால், சுவிசேஷகர்களும், போதகர்களும் வந்து எங்களோடு சுற்றி நில்லுங்கள். ஒவ்வொருவரும் சபைகளோடுள்ள உங்களுடைய தொடர்புகளினால் கவலையில்லை. அதற்கு இதனோடு எவ்வித சம்மந்தமும் கிடையாது. நீங்கள் அப்படியே ஜனங்களைச் சுற்றி வரும்படியாக நாங்கள் விரும்புகிறோம். நான் நேராக சென்று கொண்டிருக்கிறேன், ஆம் நான் சென்று கொண்டிருக்கிறேன்…(அதுவே உங்களுடைய இருதயத்தின் செயல் நோக்கமாய் இருக்கட்டும்) நான் கிரயம் செலுத்துவேன், மற்ற கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்களோ, நான் கர்த்தருடைய அவமதிக்கப்பட்ட சிலருடைய வழியையே (மிகாயாவைப் போன்று) தெரிந்து கொள்வேன், நான் இயேசுவோடு துவங்கியுள்ளே, எனவே நான் நேராய் சென்று கொண்டிருக்கிறேன். ஓ, நான் நேராய் சென்று கொண்டிருக்கிறேன், ஆம் நான் சென்று கொண்டேயிருக்கிறேன்… நான் கிரயம் செலுத்துவேன்; மற்ற கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்களோ, நான் கர்த்தருடைய அவமதிக்கப்பட்ட சிலருடைய வழியையே தெரிந்து கொள்வேன் நான் இயேசுவோடு துவங்கியுள்ளேன்; நான் நேராய் சென்று கொண்டிருக்கிறேன். 227 நான்…அந்த வழியை எடுத்துக் கொள்ள விரும்புகிற வேறு யாராவது ஒருவர் அங்கே இருக்கிறார்களா? “நீங்கள் என்னைக் குறித்து என் பிதாவின் முன்பாக அல்லது மனிதர்கள் முன்பாக வெட்கப்பட்டால், நான் காலையில் தூதர்கள் முன்பாக உங்களைக் குறித்து வெட்கப்படுவேன்.” 228 இன்றிரவு, இந்த சிறிய ஜனக்கூட்டத்திற்கு முன்பாக உங்களுடைய உறுதியை எடுக்க நீங்கள் வெட்கப்படுகின்றீர்களா? நீங்கள் வெட்கப்படுகின்றீர்களா? “மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவனை நான் என் பிதாவின் முன்பாக அவனை அறிக்கை பண்ணுவேன்” கர்த்தாவே நான் வழியை தெரிந்து கொள்வேன், நான் நேராக செல்கிறேன், நான் இயேசுவின் மூலம் துவங்கியுள்ளேன். எனவே நான் நேராகச் செல்கிறேன். 229 அவர்களுடைய பாவங்களின் மன்னிப்புக்காக தேவனுக்கு அவர்கள் நன்றி கூறுதலை ஏறெடுத்துக் கொண்டிருக்கையில், ஒவ்வொருவரும் அப்படியே ஜெபத்தில் இருங்கள். 230 ஓ, தேவனே, பிதாவே, மனித வர்க்கத்தின் மீட்பரே, இவர்கள் தாங்கள் போதுமானபடியாய் கிறிஸ்துவினுடைய சரீரத்தில் பொறுத்தப்படவில்லையென்று அறிக்கை செய்து கொண்டு, இன்றிரவு வந்திருக்கிறார்கள். வார்த்தையாலும், தேவனுடைய கரத்தின் வழிநடத்துதலாலும் அவர்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள அவர்கள் இன்றிரவு வந்திருக்கிறார்கள். 231 அவர்கள் எந்த விதத்தில் சேவை செய்வார்களோ, அந்த ஸ்தானத்தில் அவர்களை இராஜ்ஜியத்தில் நீர் பொருத்தும்படியாய் இப்பொழுது நாங்கள் ஜெபிக்கிறோம். இன்றிரவு அவர்கள் ஒருமனதோடு உம்முடைய பரிசுத்த வார்த்தையின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் இருப்பார்களாக. நீர் பரிசுத்த ஆவியின் மூலமாய் அவர்களிடத்தில் பேசுவீராக. அவர்கள் ஆவியின் ஏவுதலால் கிறிஸ்துவின் சரீரத்தில் நீர் அவர்களை அழைத்திருக்கிறதான அந்த ஸ்தானத்திற்கு வழிநடத்தப்படுவார்களாக. 232 ஓ, தேவனே, இதற்காக நாங்கள் உமக்கு எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம். இது உம்முடைய பார்வையில் மகிமை பொருந்தியதாயிருக்கிறது. புருஷர்களும், ஸ்திரீகளும் பீடத்தண்டையில் தாழ்மையாய் முழங்காற்படியிட்டு, தங்களுடைய தவறுகளை அறிக்கை செய்து இரக்கத்திற்காய் வேண்டுகிறதை காண்பது நம்முடைய இருதயங்களை சிலிர்க்கச் செய்கிறது. கர்த்தாவே, அவர்களை முழுமையாய் ஏற்றுக் கொள்ளும். 233 உம்முடைய அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்கள், வார்த்தையின் ஊழியர்கள், இந்த ஜனங்களின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். நான் இந்த புனிதமான மேஜையின் அருகில் இங்கேதான் நின்று கொண்டிருக்கிறேன். 234 இது ஒரு அற்புதமான நேரம். இந்த இடத்தின் பக்கத்தில் இன்றிரவு தேவனுடைய தூதர்கள் அவர்களுடைய பாளயத்தை கீழே அமைத்திருக்கின்றனர். ஏனென்றால், “தேவனுடைய தூதர்கள் அவருக்குப் பயந்தவர்களை சூழப்பாளயமிறங்கி இருக்கிறார்கள்” என்று வார்த்தையில் எழுதப்பட்டிருக்கிறது. 235 காணக்கூடாத மகத்தான உலத்தில், அது இப்பொழுது நம்மைச் சுற்றி இருக்கிறது. நாம் தவறானதை செய்திருக்கிறோம் என்பதற்கும், நம்முடைய கண்களுக்கு முன்பாக பொல்லாப்பானதைக் கொண்டு வருவதற்கும், மனந்திரும்புதலுக்கும், நம்முடைய மன உணர்ச்சிகளை கலக்குகிறது. தவறுக்காக வருந்துகிற இருதயங்களோடு, எங்களுடைய பொல்லாத வழிகளை விட்டு, நாங்கள் சரணடைந்து ஒப்புக்கொடுத்து, கர்த்தாவே, தெய்வீக இரக்கத்தையே கேட்கிறோம். அவருடைய வார்த்தைக்கு பொருத்தமாய், எங்களுடைய நற்குணத்தையும், எங்களுடைய ஜீவியங்களை வார்ப்பிப்பதற்கும், அவருடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்கும் நாங்கள் தாழ்மையாய் தேவனிடத்தில் கெஞ்சிக் கேட்கையில், இரக்கத்தை எங்களுக்கு வாக்களித்திருக்கிற பரிசுத்த ஆவியானவர் அதை எங்களுக்கு ஒவ்வொருவருக்கும் தருவாராக. கிறிஸ்துவினுடைய நாமத்தினால் நாங்கள் கேட்கிறோம்.